பக்கம்:இலக்கியக் கலை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 இலக்கியக் கலை நாம் அறிகிறோம். இப்பொருளும் தரும் ஒரு சொல்லை ஆசிரியர் அங்குப் பெய்யாவிடினும் மீளா ஒருவன் மீண்டும் வருகிறேன்: கவலை கொள்வற்க என்று கூறுவதே நாடகக் குறிப்பு தான். மேலும் இத்தகைய ஒரு சொல்லையும் ஆசிரியர் பெய்து விட்டமை யின் அவ்வில்க்கிய அழகு இன்னும் மிகுதிப்படுகிறது. இதே காப்பியத்தில் முற்பகுதியிலும் இத்தகைய நாடகக் குறிப்பு இருக்கிறது. கோவலனுக்கு மணம் ஆன அன்று இரவு தோழிகள் கண்ணகியைப் பள்ளி அறையில் அமளியில் ஏற்றுகிறார்கள். என்ன வாழ்த்துக் கூறுகிறார்கள்? 'காதலற் பிரியாமல் கலுவுக்கை நெகிழாமல் தீதறுக என வாழ்த்துகிறார்கள். இப்பகுதி ஒப்பற்ற நாடகக் குறிப்பாகும். முதல் நாள் இரவிலேயே இம்முறையில் வாழ்த்துவது விந்தையே! ஆனாலும் கண்ணகியும், தோழிகளும் இதில் தவறு ஒன்றுங் காணவில்லை. நாடகம் காண்கிற நாம் இதில் உள்ள குறிப்பை அறிய முடிகிறது. இந்நிகழ்ச்சி நடந்த சில காலத்தில் காதலன் பிரிந்து விடுகிறான்; கவவிய கை நெகிழ்ந்து விடுகிறது. இறுதியில் தீதும் நடந்து விடுகிறது. நாடகத் தலைவன் மிகப் பழங்காலத்தில் தோன்றிய நாடகங்களுள் ஒன்றும் இன்று இல்லையாகலின் அவைபற்றி நாம் ஒன்றுங் கூறுதற்கில்லை. ஆனால் இடைக்காலத்துத் தோன்றிய நாடகங்கள் அனைத்தும் அரசர் முதலிய தலைவர்கள்ையே கொண்டிருந்தன. நாடகத்திற்குத் தலைவனாக இருப்பவன் தன்னேர் இல்லாத் தலைவனாக இருத்தல் வேண்டும் என்றே இந்நாடக ஆசிரியர்கள் கருதினர் போலும்! நாடகத் தலைவனுக்கு ளலக்கணங் கூறும் ஒன்றிரண்டு பகுதிகள் அகப்பட்டவற்றைக் கொண்டு பார்ப்பினும் இக் கருத்தே வலியுறுத்தப்படுகிறது. இற்றைக்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு முன்னர்த் தோன்றிய இராம நாடகக் கீர்த்தனைகளும் அவ்வாறே. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை அவ்வாறன்றிச் சாதாரண மனிதனைத் தலைவனாகக் கொண்டு தோன்றிற்று. ஆனால், நந்தனாரைவிட வேதியர், அங்குப் பெருமைப்படுத்தப்படுவதின் நோக்கம் நாட்கத்தலைவர் உயர்ந்த வருணத்தவராக இருத்த்ல் வேண்டும் என்பது கருதிப்ப்ோலும். இப்பொழுது அதிகம் காண்ப் பெறாத ஒருவகை நாடகம் பல்கி இருந்த காலமும் உண்டு. அதன் பெயர் கொண்டி நாடகம், குறவஞ்சி நாட்கம் இதன் பின்னர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/407&oldid=751243" இலிருந்து மீள்விக்கப்பட்டது