பக்கம்:இலக்கியக் கலை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388. இலக்கியக் கல்ை கிறார்கள். ஆனால் மணி, பவழம், முத்து முதலிய பலவற்றை ஒன்றாக இணைத்து ஒரு நூல் இருப்பதுபோல், இச் சிறு நிகழ்ச்சிகள் பலவற்றையும் இயைவித்து நிற்பத்ே செயல் பொருக்கம் எனப்படும். நாடகம்பற்றி இதுகாறும் கூறியவற்றுள் பெரும்பாலன மேலை நாட்டுத் திறனாய்வ்ாளர் கருத்துக்களேயாம். இக்கிலை நம் நாட்டில் இன்னும் நன்கு வளராத ஒன்று. எனவே இங்குக் கூறிய பல நியாயமா என்று கூடக் கேட்கத்தோன்றலாம். ஆன்ரல் ம்ேன்லநாட்டார் கண்ட் திறனாய்வுப் பகுதியில் பொதுத்தன்மையை யுடையன மட்டுமே இங்குத் தரம்பட்டுள்ளன நம் ந்ாட்டில் இனி வளரவிருக்கும் இக்கலை இந்த முறையில் வளர்ந்தால் நன்றாகவிருக்கும் என்ற கருத்துப்பற்றியே இவை எழுதப் பட்டன. ". வானொலி நாடகம் இறுதியாக இப்பொழுது மிகு தி யு ம் பயிலப்படும் வானொலி நாடகம் பற்றி ஒரு வார்த்தை கூறல்வேண்டும். வானொலி வளர்ந்த இற்றை நாளில் நாடகங்கள் நூற்றுக் கண்க்கில் வெளிவருகின்றன. இங்குக் கூறப்பெற்றவற்றுள் காட்சியளவில் பயன்படாமல், இசையளவில் பயன்படும் அனைத்து இலக்கணங்களும் வானொலி நாட்கிங்கட்கும் பொருந்தும். இவற்றை அல்லாமலும் ஒன்று கவனித்தற் குரியது. ஏனைய நாடகங்களில் அரங்கம், திரை டிக்கள், உடை முதலிய புறச்சாதனங்கள் இருந்து நாடிகத்தின் ஆருத்தை நம் மனத்தில் செலுத்த உதவுகின்றன. உரையாடல் செய்யும் வேலை ழேற்கூறிய கருவிகளால் மிகுதியும் குறைக்கப்படுகிறது. ஆனால், வானொலி நாடகத்தில் இவ்வகை டிதவி ஒன்றும் இல்லை. ஒலி ஒன்றினாலேயே கேட்பவர்கட்கு முன்னர்க் கூறிய அனைத்து உணர்ச்சியையும் ஊட்டில் வேண்டும். செவி, தண் என்ற இரண்டு பொறிகட்கு வேலை தந்ததுபோகச் செவி ஒன்றையே நம்பி வானொலி நாடகம் நடைபெறுகிறது. எனவே நாடகாசிரியர்கள் மிகவும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். தாங்கள் இயற்றும் உன்ரயாடல் நினைத்த பயனைச் செய்கிறதா என்பதை நன்கு அறிந்து உரையாடில் அமைக்கவேண்டும். அரங்கில் நடைபெறும் நாடிகத்தில் பார்ப்பவர் கற்றுக் கவனக்குறைவால் உரையாடலுைக் கேள் திரும்பினும் பார்த்துக்கொண்டிருத்தலின் தொடர்புைடிவிஷ்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/409&oldid=751245" இலிருந்து மீள்விக்கப்பட்டது