பக்கம்:இலக்கியக் கலை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 389 விடமாட்டார். ஆனால், வானொலி நாட்கத்ல்ல் இவ்வசதி இல்லை. அதிலும் ஒரு மணிநேரம் நடைபெறும் நாடகத்தில் இன்னும் கவனஞ் செலுத்த வேண்டும், உரையாடல் அலுப்புத் தட்டாத வகையில், அமைதல் வேண்டும். கதை விறுவிறுப்புக் குறையாமலும் நீண்ட பேச்சுக்கள் அதிகம் இல்லாமலும் "ஒலிஅலையுந் தன்மைக்கு இடம் தரும் பேச்சுக்கள் நிறைந்தும் இருந்தால் வானொலி நாடகஞ் சிறக்கும். ● Ljū ióőr இத்துணைத் துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு, இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் வளரும் இக்கலை என்ன பயனை அளிக்கிறது? கலை வாழ்க்கையினைச் செம்மைப்படுத்தும் ஒப்பற்ற சாதனம்’ என்பது அறிஞர் கொள்கை. அதிலும் நாடகக்கலை மக்கட் சமுதாய முன்னேற்றத்திற்கு மிகவும் வேண்டப்படும் ஒன்று. எனவே, ಧ್ಧಿ); ஒரு குறிக்கோள் இல்லாதிவனாக இருப்பின் அவன் நாடகம் பயனற்றதாகும் அவன் காலமும், நமது காலமும் வீண்போகவே அது வழி செய்வதாகும். இதனால் நல்லொழுக்கம் கற்பிக்கவே நாடகம் தோன்றுகிறதுபோலும் என்று எண்ணி விடவேண்டாம். ஒர் ஆசிரியன் தேர்ந்தெடுக்கும் கதையும், அவன் படைக்கும் பாத்திரங்களும், அப்பர்த்திரங்களினுடைய ப ண் புக ளு ம் ஆசிரியனுடைய கற்பனையில் உதவியால் தோன்றுபவையாகலின் அவனுடைய வாழ்க்கைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே அவை தோன்றும். அவன் தத்துவம் பழுதுபட்ட தாகவும் சமுதாயத்திற்குத் தீங்கு இழைப்பதர்கவும் இருப்பின் நாடகமும் அங்ங்ணமே ஆகும். நாடகம் ஏனைய கலைகளைவிட எளிதில் மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும். ஆக்லின் ஆசிரியன் இதன்கண் கவனத்துடன் இருத்தல் வேண்டும். முத்தமிழ் வளர்த்த நாட்டில் இனியாவது நாடகம் நன்கு வளர்வதாக. f Acting. 2. Dancing - 1. 3. The Ancient Tamil Theatre. 4. Drops. 5. Tragedies. 6. Drops. 7. Side screens. 8. §albu - 8: 109. 9. Gauthly: 8: 110 10. சிலம்பு : 3 108. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/410&oldid=751247" இலிருந்து மீள்விக்கப்பட்டது