பக்கம்:இலக்கியக் கலை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 31 சிறு கதை - . . இன்றைய கிலை தமிழ்மொழி ஏனைய துறைகளில் முன்னேற்றம் அடைந்: துள்ளதா என்பது ஐயத்திற்கு இடமான ஒன்றாயினும், ஒரு துறையில் அது முன்னேற்றம் பெற்றுள்ளது. அதுவே சிறுகதைப் பகுதியாகும். ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்குள் 1950, சிறுகதைகள் தமிழ்நாட்டில் மலைபோலக் குவிந்துவிட்டன. அவை அனைத்தும் சிறந்தவை என்று கூறுவதற்கில்லை. என்றாலும், அதற்கு முன்னர் அதிகம் காணப்பெறாத இப்பகுதி இந்நாளில் மிகுந்துளது வரவேற்றற் குரியதே. இதன் காரணங்கள் பலவாகும். நாட்டில் பத்திரிகைகள் மிகுந்தன. மனித மனம் என்றுமே கதையில் ஈடுபடும் இயல்பு வாய்ந்தது. எனவே, பத்திரிகைகள் இப்பகுதியை வளர்த்தாலொழிய மக்கள் மனத்தைக் கவர முடியாதென்ற உண்மையை விரைவில் உணரலாயின. மாத இதழ்களும், வார ,இதழ்களும் காளான்போலத் தோன்று ஆரம்பித்த நாளில் கதை ஒன்றே பத்திரிகைகள் வாழ வழி செய்தது. பெரும்பாலான இதழ்கள் எக்கருத்துடன் தோன்றின? மக்கள் அறிவை வளர்க்கவும், கலையை வாழ்விக்கவுமா அவை முகிழ்த்தன? ஆம் என்று விடைகூறினால், அது பொய் இல்லை என்று விடைகூறினால் பலரின் வெறுப்புக்கும் துாற்றலுக்கும் ஆளாக நேரிடும். கதையின் உதவி இன்றித் தமிழ்நாட்டில் ஒரு ம்ாத இதழோ, வார இதழோ வாழுமா என்று கேட்டால் விடை இறுப்பது கடினம். கலா நிலையம் தமிழ்ப்பொழில்' போன்ற இதழ்களின் நிழல்கள் நம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றன. சேஷாசலம் அவர்களின் ஒப்பற்ற உறுதியால் கலாநிலையம்' வாழ்ந்தது ஒரு சிலரின் முயற் சி ய | லு ம், உறுதியாலும் கலைக்கதிர் வாழ்கிறது. ஆனால், தமிழ்மக்கள் மனநிலையும், கலைஆர்வமும் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது? தமிழ்நாட்டில் தெலவாகும் வார மாத இதழ்களில் அதிகம் செலவாகும்.இதழை எடுத்துக்கொண்டு அவற்றில் வெளிவரும் கதைகளைப் பார்த்தால் விளங்கும். வாசமில்லாப்புட்பத்தை மதிப்பாரில்லை: ர்கள் உள்ள இந் நாட்டில் எந்தப் அதிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/412&oldid=751249" இலிருந்து மீள்விக்கப்பட்டது