பக்கம்:இலக்கியக் கலை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 இலக்கியக் கலை செலவாகிறது என்று தெரியுமா? மணம் என்பதைக் கனவிலும் அறியாத கனகாம்பரப் பூதான். அதே போலக் கலையை வளர்ப்போம்', 'கலை வளர்கிறது தமிழ்நாட்டில் என்ற கூக்குரல் காதைப் பிள்க்கிறது. ஆனால், ஒரு மாதம் முற்றிலும் தோன்றும் எழுத்துக்களில் ஒன்று இரண்டு தவிர ஏனையவை அடுத்தமாத இதழ்வரை உயிருடன் இருக்கின்றனவா என்று கண்டால் உண்மை விளங்கும். உயிருடன் இருக்கும் கதைகளே தம் இதழில் வரவேண்டும் என்று ஒரு இதழ் ஆசிரியர் முடிவு ச்ெய்வாரானால் அவருடைய இதழ் தேய்பிறை போலத்தான் வளர்ச்சி யட்ையும். காரணம் என்ன? மக்கள் விருப்பம் உயிருள்ள கலையின்மேல் செல்வதில்லை. பொழுதுபோக்கு நடைபெறவே இதழ்களைப் படிக்கும் இயல்பு விஞ்சி இருக்கிறது. இதனால் தவறு ஒன்று மில்லை. ஆனாலும் அத்தகைய பொழுதுபோக்கிலும் கூட அறிவு வளர்ச்சிக்கு வழி இருத்த்ல் வேண்டும். . . . . . பரந்த நோக்கம் எங்குப் பார்த்தாலும் வார இதழும் மாத இதழும் காட்சியளிப்பதைக் காண்கிறோம். அவற்றில் கதைகளே உள்ளன. மேலோட்டமாக சில இதழ்களை எடுத்துக்கொண்டு அவற்றின் கதைகளைப் பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். பல சமயங்களில் ஒவ்வொரு சதையைப் படிக்கும் பொழுது இதை முன்னர் எங்கேயோ படித்திருக்கிறோம் என்ற எண்ணம் தேர்ன்றும். முழுக்கதையிலும் தோன்றாவிட்டாலும் சில உயிர்ப்பகுதி களில்ாவது இவ்வெண்ணம் தோன்றுகிறது. இதிலிருந்து விளங்கும் உண்ம்ை ஒன்றுதான். தமிழ்நாட்டுக் கதை எழுத்தாளர் பரந்த ந்ோக்கத்துடன் தம்முடைய சொத்து இது, பிறருடையது இது என்று வேற்றுமை பாராட்டாமல் அனைத்தையும் பயன்படுத்து கின்றனர் என்பதே. காரணம் வாரம் ஒன்றுக்குப் பலப்பல கதைகளை உற்பத்தி செய்ய வேண்டியிருப்பதே ய்ாகும். இவை ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் சில சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்சிறார்கள். கிரீன்ஞ்சென்ற புதுமைப்பித்தன், கு.ப. இராஜகோபாலன் என்ற இருள் கதைகளுள் சில சாவா இலக்கியத்தில் இடம் பெறுபவை. இன்றும் திரு. பி. எஸ். இராமிையா, கி.வா. ஜூனிதன், க்ரியாவி புரத பாலகிருஷ்ணன், ஜீவர் லா.ச.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/413&oldid=751250" இலிருந்து மீள்விக்கப்பட்டது