பக்கம்:இலக்கியக் கலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இலக்கியக் கலை புகழ் வேட்கை இலக்கியம், இயற்றப்படுவதற்குரிய துடிப்புகளுள் ஒன்றாகப் புகழ் வேட்கைய்ைக் கருதலாம். தலைசிறந்த இலக்கியப்படைப்பு ஒன்றைப் படைப்பதன்மூலம், காலம் எனும் காரிருளில், தம்முடைய புகழொளிய்ை நிலைநாட்டி விட்டுச் செல்லத்துடிக்கும் கலைஞர்கள் பலர் அன்றும் இருந்தனர்; இன்றும் உள்ளனர். ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் புகழாசையாலேயே, மூவருலா தக்கயாகப் பரணி போன்ற படைப்புகளை ஆக்கியுள்ளனர். இந்தப் புகழாசையினோடு நெருங்கிய தொடர்பு உடையது பொருள் வேட்கை, "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' அல்லவா? எனவே, மனிதராகப் பிறந்த பாணர், புலவர் முதலிய கலைஞர்கள் பொருளினை - பரிசினை நாடியும் தேடியும், கால் கடுக்கப் பல காததுாரம் நடந்தும் சென்று, புரவலர்களைப் போற்றிப் பாடியுள்ளனர். புகழ்வேட்கையும், பொருள்வேட்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. இவ்வுலகில் உயிர்வாழத் தேவைப்படுவ்து பொருள் என்றும், என்றும் நிலைத்திருக்கக் கூடியது புகழ் என்றும் கூறுவர். இவ்விரு துடிப்புகளால் உந்தப்படாத கலைஞன் - ம்னிதன் ஒருவனை உலகில் காண்வே இயலாது. இந்த உள்ளத்து உந்துதல் ஆற்றல்களால் அல்லது துடிப்புகளுள் ஒன்ற்ாலோ பவவற்றாலோ உலகில் தோன்றாப் புக்ழோடு விளங்கும் கன்ல்ப்படைப்புகள் யாவுமே படைக்கப் பட்டுள்ள்ன. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை! - புதுவகை. இந்தத் துடிப்புகளை நான்குவகையாக த் தொகுத்துக் கூறும் திறனாய்வாளர்களும் உண்டு. "தம்மைத்தாமே வெளிப்படுத் த வேண்டும் எனும் ஆர்வம் பொங்கி வழிகின்றபொழுது இலக்கியம் போன்று கலைப்படைப்புகள். படைக்கப்படுகின்றன எனும் கருத்தினைக் கூர்ந்து நோக்குவோம். ... ... -- நாம் முன்னர்க் கண்ட அனுபவப் பரிமாற்றத் துடிப்பு' புதுமையைப் புலப்படுத்தத்துாண்டும் துடிப்பு இன்புறுத்தத் தூண்டும் துடிப்பு எனும் மூன்றும் தன் வெளிப்பாட்டுத் துடிப்பு. என்பதனுள் அடங்குவதைக் காண்க. - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/42&oldid=751256" இலிருந்து மீள்விக்கப்பட்டது