பக்கம்:இலக்கியக் கலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 4 இலக்கியத்தின் இயல்புகள் இலக்கியம் படைக்கப்படுவதற்கு உந்துதல் சக்தியாக அமையும் துடிப்புகள் பல. அவற்றில் இருந்து, மனிதனின் ஆளுமையைப் பொலிவுடன் வெளிப்படுத்தும் தலைசிறந்த கலைப்படைப்பாகவே இலக்கியம் தோன்றுகிறது என்பதையும், இலக்கியம் மனிதவாழ்க் கையை அடுத்தது காட்டும் பளிங்குபோல் படம்பிடித்துக்காட்ட வல்லதாகும் என்பதையும், வாழ்க்கைக்கு ஒளியூட்டும் ஒளி விளக்காகவும் அது விளங்குகிறது என்பதையும், நாம் முன்னரே கண்டோம். இலக்கியம் மனித இனத்தின் அனுபவங்களைக் கலை நயத்தோடு எடுத்து உரைப்பதே இலக்கியம். இந்த இலக்கியத்தினை வரையறுத்துக் கூறுவது எளிய செயல் அன்று. ஆனால். இயல்புகள் சிலவற்றைக் கொண்டு, எளிதில் அதனை இனங்கண்டுகொள்ள இயலும். இலக்கியத்தை வாழ்க்கையில் மொழியியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த அறிஞர் ந. சஞ்சீவி, "வாழ்க்கையின் தனிச்சிறப்புக் கூறுகளை வடித்துக் காட்டுவதே இலக்கியம் என்பது விளங்கும். ஆம். இலக்கியம் வாழ்க்கையின் வடிவம் அன்று! வார்ப்பே ஆகும்! ஒருவகையில், ஒலிகளை வடிவங்கள் என்று உவமிக்கலாம். இலக்கியங்கள் என்று வாழ்க்கையின் ஒலியன்கள் (Phonemes) என்று போற்றலாம்' எனத் தெரிவித்துள்ளார். நால்வகைப் பண்புகள் அவர், இலக்கியத்தின் சிறப்பு இயல்புகளாகப் "புதுன்ம, 'பெரும்ை. பொதுமை, பொருண்மை’ என்பனவற்றை வரை பட விளக்கத்தோடு தெளிவுறுத்தியுள்ளமை இங்குக் கருதத்தக்க தாகும்." புதுமை இருவகைப்படும் : பாடுபொருளாகிய பொருண்மை (content) யிலும் புதுமை-புத்தாக்கங்கள் இடம் பெறும். மற்றும் உணர்த்தும் முறையிலும் புதுமை இடம் பெறும். இதனை வடிவ அமைப்பில் காணப்பெறும் புதுமை எனவும் கூறலாம். மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் எனும் பாவேந்தரின் கருத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/45&oldid=751259" இலிருந்து மீள்விக்கப்பட்டது