பக்கம்:இலக்கியக் கலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இலக்கியக் கலை அவனுடைய உள்ள உணர்வுகள் கற்பனை நயத்தோடும் கலையழ கோடும் குழைந்து இலக்கியமாக வெளிப்படுகின்றன. அந்தப் படைப்பாளிக்கு அடிப்படையாக மனித இனம் பெற்ற அனுபவமும் தானே பெற்ற அனுபவமும் அமைகிறது. எனவே, ஓர் இலக்கியத்தை முழுமையாக நுகர்ந்து இன்புற வேண்டுமானால் அதில் இடம் பெற்றுள்ள இயல்புகளை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். எனவே, இலக்கியத்தின் சுவையை அனுபவிக்கப் பயிலுதல் போலவே, அதன் இயல்புகளையும் பகுத்துப் பகுத்து ஆராய்ந்து அறியவேண்டும்.) . - | இலக்கியம் அழகுக் கலைகளுள்-நுண்கலைகளுள்-தலை சிறந்தது என்பதை முன்னரே கண்டோம். அறிவும் மனவுணர்வும் கற்பனையும் கலந்து செயல்பட்டு மக்களுக்கு இன்பம் அளிக்கும் கலைகள் யாவும் அழகுக்கலைகள் எனப்படும். உலகில் உள்ள சில 'உண்மைகளும் அழகுணர்வுகளும் எளிதில் யாவருக்கும் புலப்படுவ தில்லை. நுட்பமான புலனுணர்வும் கற்பனை ஆற்றலும் வாய்ந்த சிலரால், அத்தகைய உண்மைகளும், அழகுணர்வுகளும எளிதில் இனங்கண்டுகொள்ளப்படுகின்றன. தாம் பெற்ற இன்பத்தையும் அனுபவத்தையும் கொண்டு அவர்கள், பலருக்கும் பயன்படும் வண்ணம் பல்வகைக் கலைப் படைப்புகளை ஆக்குகின்றனர். அப்படைப்புகளில் இடம்பெறும் இயல்புகள் பல. அவற்றுள் முதன்மையானவற்றை தலைமையானவற்றை நாம் அறிந்தால் தோன். அவை நல்கும் இன்பத்தை நுகர்ந்து மகிழ இயலும். - ತಿಕಿಣp பண்புகள் அவற்றை அகத்துறு பண்புகள் எனவும் புறத்துறு பண்புகள் எனவும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் வகைப்படுத்திக் கொள்ளலாம் முதலில் அகத்துறு பண்புகளின் எழிலையும், ஏற்றத்தையும் கர்ண்போம். . . . . . ; : . * * - அறிவுத்திறமையைப் புலப்படுத்துவதோடு இன்பத்தை அளிக்கும் முறைப்படுத்தப்பட்ட படைப்புகள், செயல்கள் எல்லாம் அழகு வாய்ந்தனவாக உள்ளன. அழக்ான பொருள் வற்றாது. இன்பஊற்று அல்லவா? நம் உள்ளத்தில் அழகு உணர்ச்சியைத் தூண்டும் முறையில் ே செஞ்சொற்களைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/48&oldid=751262" இலிருந்து மீள்விக்கப்பட்டது