பக்கம்:இலக்கியக் கலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இயல்புகள் 33 கொண்டு வாழ்க்கை அனுபவங்களை இழைத்துக் காட்டும் அரிய பணியை இலக்கியம் செய்கிறது. "இலக்கியம்' என்பது யாது? எனும் வினாவிற்கு மிகச் சுருக்கமாக விடை கூறுவதானால் அழகுணர்ச்சி ததும்புமாறு எழுதுப்படுபவை யாவும் "இலக்கியம்" எனலாம். இந்த வன்ரயறையை அளவுகோலாகக் கொண்டர்ல், எழுத்தாளர்கள் எழுதுவ்ன எல்லாம் இலக்கியம் ஆகா என்பது வெளிப்படை. : * பொதுவாக நாம் குடியிருப்பதற்குக் கட்டப்படும் வீடுகள் எல்லாம் வெயில், மழை, குளிர் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் நாம் வாழ்வதற்காகக் கட்டப்படுகின்றன. எனவே அதன் நோக்கம் பயன்பாடு'தான். அதில் கலையழகு - சிற்பக்கலையின் சிறப்பு . பொதுவாக அமைவது இல்லை. இதைப் போன்றதே பல நோக்கங் களோடு எழுதப்படுகின்ற நூல்கள். ஆனால், அவற்றில் கலையழகும் கற்பனைச்சிறப்பும் வாய்ந்தால் மட்டுமே இலக்கியமாகப் போற்றப் படும் தகுதியைப் பெறுகின்றன. இத்தகைய படைப்புகளின் கலை பழகில் ஈடுபடுகிறபொழுது, அந்த நூலின் பொருளையும் அதனை எடுத்துரைக்கும் முறையையும் நாம் மறந்துவிடுகிறோம். ஆனால் அந்நூலின் சொல்நயமும், பொருள் நயமும், நடைநயமும் நம் மனத்தை ஈர்த்து, இன்பம் ఇకవితpణ - (ஆ) குறிப்பாற்றில் இந்தக் கலையழகுதான், இலக்கியத்தின் சிறப்பு இயல்புகளுள் முதன்மையானது. இந்தக் கலையழகு எவ்வாறு இலக்கியத்தில் அமைகிறது? அல்லது இலக்கியத்தில் வெளிப்படுகிறது? என்பதை ஆராயும்போது, அடுத்துள்ள சிறப்பியல்புகள் தாமே வெளிப் படுகின்றன. அவற்றுள் குறிப்பாற்றல் அல்லது கருத்துத்துரண்டல் (Suggestiness) என்பது இலக்கியத்தின் இரண்டாவது சிறப்பு இயல்பாகும். இது நம்முடைய அறிவைக்காட்டிலும் நமது உணர்வையும், கற்பனை ஆற்றலையும் செயற்படுமாறு தூண்டு கிறது. ஒரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லுவதைவிட நம்முடைய உள்ளவுணர்வை உசுப்பி விடுவதிலேதான், இத்தக் குறிப்பாற்றலின் சிறப்பு அமைகிறது. நல்லை அல்லை நெடுவெண்ணிலவே! (குறுந், 47) எனும் சங்கப் புலவனின் கருத்துத்துண்டல் திறனைக் காண்போம். நெடுநேரமாகக் காயும் நிலவே! நீ நன்மை செய்யப்போவது இல்லை @.一?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/49&oldid=751263" இலிருந்து மீள்விக்கப்பட்டது