பக்கம்:இலக்கியக் கலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை எண்ணற்ற இலக்கியங்களும் வேண்டுமான அளவு இலக்கணங் களும் தமிழ்மொழியில் உள்ளன. முத்தமிழ் என்ற வழக்கு இடைக் காலத்தில் தோன்றியதற்கேற்ப இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகளிலும் நூல்கள் பல்கி இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று இயல் துறையில் மட்டும் பழைய நூல்கள் கிடைக் கின்றனவே தவிர, ஏனைய இருதுறைகளிலும் ஒரு பழைய நூலும் கிடைத்திலது. எனவே இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு பழந் தமிழில் எவ்வகை நூல்கள் இருந்தன, எவ்வகை நூல்கள் இல்லை என்று ஆராய்ந்து முடிவு கட்டுவது இயலாத காரியந்தான். ஆனாலும் பழைய தொல்காப்பியம் இலக்கணம் அமைகின்ற வகையை ஒட்டியும், இடைக்கால உரையாசிரியர்கள் தம் காலத்து இருந்தனவாகக் கூறுகிற நூல்களின் பெயர்கள். மேற்கோள்கள் முதலியவற்றை ஒட்டியும் ஒருவகையான முடிவுக்கு வருதல் கூடும். எத்துணைத் துறைகளில் தமிழ் நூல்கள் பல்கி இருந்தபோதிலும், 'இலக்கியத் திறனாய்வுத் துறையில் தமிழ் நூல்கள் இல்லை என்று கூறினால் தவறில்லை என்றே தோன்றுகிறது. இவ்வாறு கூறுவதால் தமிழ் மொழியின் சிறப்புக் குறைந்து போனதாக யாரும் நினைத்து விட வேண்டிா. - - - - . . . . . ; ; * く ஓர் இனிய தின்பண்டத்தை ஒருவன் செய்யும் வகைல்ய அறியாமையினால் அதனைத் தின்று அனுபவிக்கவும் அறிய மாட்டான் என்று கூறுதல் எவ்வளவு தவறானது? அதேப்ோல் இலக்கியத்தைத் திறனாய்வு செய்ய நூல் எழுதாமையால் அதன்ன் அனுப்விக்கவும் தமிழர் அறியார் என்று கூறுதலும் பொருத்த மற்றதே. நல்ல இல்க்கியங்களைத் தமிழ்ர் நன்கு அனுபவித்தி காணத்தால்தான் இத்துணை அளவு தமிழ் நூல்கள் பெருகின் காலாந்தரத்தில் வளர்ச்சியும் அடைந்தன. "நீண்மாடிக் கூடலார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/5&oldid=751264" இலிருந்து மீள்விக்கப்பட்டது