பக்கம்:இலக்கியக் கலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இலக்கியக் கலை எனவே, நீ கொடியவன் என்பது மேற்கண்ட அடிக்குரிய நேரான பொருளாகும். - இந்தப் பொருளை அறிந்தவுடன் ஏன் இவ்வாறு பாடியுள்ளார்? புலவர் என்பதை அறிய ஆவல் எழுகிறது. உடனே, இந்தக் கருத்தைச் சொல்வது யார் என்பதை அறியத் துடிக்கிறோம். அகப் பொருள் இலக்கியத்தின் கதை மாந்தருள் முதன்மை இடம்பெறும் தலைவியின் தோழியே இவ்வாறு நிலவைப் பார்த்துக் கூறுகிறாள் என்பதை, பாட்டை முழுவதும் படிக்காமலேயே அறிந்துகொள்ள இயலுகிறது. அடுத்து எதற்காக அவள், இப்படிச் சொல்கிறாள் என்பதை அறிந்துகொள்ளத் துடிக்கிறோம்! - - பாடலை முழுமையாகப் படித்துப் பர்ர்ப்பேர்மானால் தன்னுடைய தலைவியின் உணர்ச்சித்துடிப்பும் மன வேதனையும் தோழியால்,பொறுத்துக்கொள்ள இயலவில்லை என்பது புலனாகும். இரவில் குறியிடத்திற்குத் தலைவன் வருவதாகத் தெரிவித்திருந் தான். அந்த இடத்திற்குக் குறித்த நேரத்தில், தலைவி வந்து விட்டாள். ஆனால் தலைவன் வந்து சேரவில்லை. அவன் வாராமைக்குக் காரணம் யாதாக இருக்கக்கூடும்? என்பதை அவள், நீடுதினைந்து உண்மையை அறிய இயலாமல், ஏங்கித் துடிக் கிறாள். நிலவு நீண்டநேரமாகப் பகல்பொழுதைப் போல ஒளி வீசுகிறது. எனவே ஊர் மக்கள் உறங்கப்போகாமல் நிலவின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். அந்நிலையில் அயலூரைச் சேர்ந்தவனாகிய தலைவன், தலைவியின் ஊரையொட்டியுள்ள குறி இடத்திற்கு வரும்பொழுது, அவனைப் பார்க்கின்றவர், அவனைப் பற்றி ஐயங்கொள்ளுவர். இதனால், தலைவனுக்கு இன்னலே மிகுதியாகும். இவற்றை எல்லாம் எண்ணியெண்ணி மனம் கலங்குகிறாள் தலைவி. இதை எல்லாம், தோழி. வெளிப்படுத்த முயலுகிறாள். . . . . . . . . . . . . . . . இவற்றால் தங்கள் காதல் உறவுக்கு அந்த நிலவு நன்ம்ை செய்வதாக இல்லை என்பதைத் தலைவி உணருகிறாள். எனவே அதைப்பார்த்து நல்லை அல்லை எனக் குற்றம் சாட்டுகிறாள் தோழி. யார்மீது குற்றம் சாட்டுகிறாள்? நிலவின் மீது குற்றம் சாட்டுகிறாள்! பொதுவாக நிலவு எனும் சொல், சந்திரனின் ஒளியைத்தான்;சுட்டும். இங்கு ஆகுபெயராக மதியினைக் குறிக் கிறது. வெறுமனே நிலவு என விளிக்காமல் வெண்ணிலவு என அடைகொடுத்து அழைக்கிறாள்; இங்கு 'வெண்மை’ எனும் அடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/50&oldid=751265" இலிருந்து மீள்விக்கப்பட்டது