பக்கம்:இலக்கியக் கலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 r @ಉಹ೩u# ಹ616) கவிதையில் அமையும் குறிப்பாற்றலால்-கருத்துத்தூண்டு தலாலேயே (Suggestiness) இந்த இலக்கிய இன்பச் சுவை புெருகுகிறது எனக்கூறத்தேவை இல்லை! இதைத்தான் மதியை மய்க்கும் இலக்கிய இன்பம் என அறிஞர் போற்றுவர். - இம்முறையில் இலக்கியத்தைச் சுவைத்துப் பழகுவோமானால் ஒரே சமயத்தில் ஐம்பொறிகள் வாயிலாகக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புல இன்பத்தைவிட, இந்த இலக்கிய இன்பம் உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும் நிலைபேறுடையதாகவும் தோன்றும். * . .- - . @ ിക്കാ சம்காலத்திய மக்களுடைய தேவைகளுக்கு ம் ட் டு ம் இர்ைப்ோடும் நூல்கள் இலக்கியமாகா. அவை அந்தக் குறுகிய கர்ல்த்திற்குள்ளேயே மறக்கப்படும்; புறக்கணிக்கப்படும்; அழிந்து கூடப் போகலாம். ' * . . . . . . . . க்ப்ரதீபக் கவிராயரின், கூளப்பநாயக்கனின் பேரி ல் இய்ற்றப்பிட்ட விறலிவிடுதூதும், காதலும் இயற்றப்பட்டி காலத்தில் வியந்து பாராட்டப்பட்டன; பரிசுகளும் பெற்றன. ஆனால் இன்று, அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்ட பொருள்களைப்போல, சமூகவியல் ஆராய்ச்சியாளர்க்கும் கல்வி இன்பக் கலைஞர்களுக்குமே தவர்ச்சி வாய்ந்த இலக்கியங்களாக உள்ளன. ஆனால் அதே சமயத்தில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், புகழேந்திப்புல்வரால் இயற்றப்பட்ட நளவெண்பா இன்றும் நல்லதோர் இலக்கியமாகப் போற்றப்படுவது ஏன்? எனும் ஐயம் எழலாம். மனித இயற்கைபெரிதும் மாற்றம்,அடைவது இல்லை. அந்த மனித இயற்கையின் சிறந்த பண்புகள்ை வீரம், காதல், கொடை, தியாகம்,அவலம் போன்ற உணர்வுகள் யாதாகிலும் ஒருவடிவில், இன்றும் மனித உள்ளத்தை ஆட்டிப்படைக்கின்றன. இந்த இயல்புகள் யாவுமே, ஒட்டுமொத்தமாக நள்வெண்பா போன்ற இலக்கியங்களில் சிறப்புற்று விளங்குகின்றன. . . . . . . இவற்றோடு, மனிதனை மனிதனாக வாழத் துரண்டும் உயர்ந்த சிந்தனைகள், எண்ணங்கள் உண்மைகளை உணர்த்தும் இலக்கியப்பண்பு நளவெண்பாவில் நயமுற எடுத்துரைக்கப் பட்டுள்ளன. இவற்றை அறக்கருத்துகள் எனவும். நீதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/52&oldid=751267" இலிருந்து மீள்விக்கப்பட்டது