பக்கம்:இலக்கியக் கலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இயல்புகள் 37 எனவும் கூறுவர். காதலின் வெற்றி, ‘அன்பின் ஆற்றல் 'குடும்பவாழ்க்கையின் பெருமை', 'ஊழின் ஆற்றல்', 'சூதாடுதலால் உண்டாகும் தீமை போன்ற என்றும் நிலைபெற்று விளங்கக்கூடிய உண்மைகளைப் புகழேந்தி புலவர் அறிவுறுத்தியுள்ளர். இவற்றை மேடைப்பேச்சு அறிவுரையாகவோ சமய போதனையாகவோ அமைக்காமல் கதையின் இடையிடையே கலைநயமும் கற்பனை வளமும் கலந்த இலக்கியத் திறன்களோடு குழைத்துக் கொடுத் துள்ளார். விறலிவிடுதூதும், பொதுமகளை நம்பாதே என அறிவுரை கூறுகிறது. ஆனால், அது பச்சையான குருவின் உபதேசமாக அமைகிறது அந்நூலின் 90 விழுக்காட்டுப் பகுதியில் பொதுமகளின் அழகு, ஆடம்பர வாழ்க்கை, அவள் தரும் இன்பம். போன்றவற்றை விரித்துரைத்துவிட்டு இறுதியில் உபதேசம் செய்தால், அது யாருடைய உள்ளத்தில் பதியும்? ஒரு இழிந்த உணர்வுகளுக்கு இரைபோடுவதாக அமையாமல் ஒப்பற்ற உயர்ந்த வாழ்வியல் தத்துவங்களுக்கும் ஆன்மிக உணர்வுகளுக்கும். கலைவடிவம் கொடுத்து இருப்பதனாலேயே நளவெண்பா நிலைபெற்று விளங்குகிறது. ' - - - நாள்தோறும் புற்றீசல்போல ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அவை எல்லாம். நெடுங்காலம் வாழ்வன. பயன்படுவன-எனக் கூற இயலாது, தோன்றிய காலத்திலேயே பல மடிந்து, மறைந்து போகின்றன. அதாவது, அவை மக்கள் இடையே செல்வாக்கற்றுப் போய்விடுகின்றன. செல்வாக்கு என்பது அந்தக் காலத்தின் தேவையை ஒட்டி அமைவது. குறிப்பிட்ட ஒரு காலகட்டித்தில் இயற்றப்படும் நூல், எந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு இயற்றப்படுகிறதோ, அந்தத் தேவை நிறைவேறி விடுமானால் பயனற்றுப் போய்விடுகிறது. இதனால், சிலகாலங் கழித்து அது வாழ்வு இழந்துவிடுகிறது. இவ்வாறு மிகக் குறுகிய காலத்திலேயே வாழ்விழந்து-செல்வாக் கற்றுப் போகும் நூல்களை, அந்த நேரத்திற்குரிய நூல்கள்' (Books for the hour) grgåruń. - - இவ்வாறு இல்லாமல் என்றும் வாழும் நூல்களாக (Books for ever) போற்றப்படுவன. இலக்கியங்களாக அமைகின்றன. கர்ல்ம் கடந்துவாழும் இயல்புடைய நூல்கள் பெரிதும் இலக்கியங்களாக உள்ளன. இதற்குரிய காரணங்கள் யாவை? எனும், எண்ணம் எழுவது இயற்கை காலத்தால் கறைபடாத கருத்துக்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/53&oldid=751268" இலிருந்து மீள்விக்கப்பட்டது