பக்கம்:இலக்கியக் கலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இயல்புகள் 39 விருப்பு, வெறுப்பு, இன்ப துன்பம், அன்பு, அருள், பயபக்தி ஆகியவை மனித இயல்பின் தலைமையான இணைப் பண்புகளாகும். இதனை இக்கால உளவியல் அறிஞர்களான பிராய்ட் (S. Freud) யங் (Jung) போன்றோர் இனிது புலப் படுத்தியுள்ளனர். இந்த இயல்புகளை எத்துணை அளவிற்கு இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றனவோ, அத்துணை அளவிற்குப் படிப்பவர் உள்ளத்தில் எதிர் உணர்ச்சியைத் தூண்டும். ஐயமிடு மனைகளிலே மரணம் என்றும் அறியாத மனையேதும் இல்லை. இல்லை!" என்பது புத்தர் பெருமானிடம், தம் குழந்தையை இழந்த தாய் கூறுவதாகும். ஆனால் இதைப் படிக்கின்றவருள், 'உற்றார் உறவினர்களை இழக்காதவர்கள் இருக்க இயலாது. அவர்கள் இதைப் படித்தவுடன் ஏக்கப் பெருமூச்சு விடுவர்; சிறிது நேரத்தில் மரணம் என்பதை யாரும் வென்றுவிட இயலாது. ஒவ்வொருவருட்ைய குடும்பத்திலும் இந்தப் பேரிழப்பு உண்டாகி இருக்கிறது எனும் உண்மையை உணர்வர்! இத்துடன் ஒருவகை ஆறுதல் உணர்வையும் அவர்கள் பெறுவர். நிலை பேற்றுத் தன்மைக்குரிய மற்றொரு சிறப்பியல்பு, படைப்பாளனின் ஆன்மிகப் பண்பாட்டைப் பொறுத்ததாகும். இதனைப் புறப்பண்புகளாகிய எதுகைமோனை, உருவகம் போன்ற புறத்துறுப்புகளாக அமைவது எனக் கருத இயலாது. இது ஆசிரியனுடைய உணர்விலும், உயிரிலும் இரண்டறக் கலந்துவிட்ட ஓர் உயிர்ப்பண்பாகும். இதனை, எளிதில் கண்டறிய இயலாது. "அறநெறிப்பட்ட வாழ்க்கையே மனிதனை மண்ணில் நல்லவண்ணம் வாழஉதவும்" எனும் தம்முடைய கொள்கைகளைப் பெருமிதம் கலந்த ஒரு புதிய முறையைக் கையாளுவதன் மூலம் திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார். எத்தனையோ அறநூல்கள் தமிழில் உள்ளன? ஆனால் அவற்றுள் ஒன்றுகூட திருக்குறளுக்கு ஒப்பாக இல்லையே திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வெகுதொலைவில் வைத்துத்தான் நாலடியார் "நீதிநெறி விளக்கம் போன்றவற்றைப் பாராட்டுகிறோம். இதற்கு என்ன காரணம்: ஆசிரியரின் ஆன்மகுணமாகிய ஆளுமை பின் ஆற்றலேயாகும். இந்தப் பண்புகளைக் கொண்டுள்ள இலக்கியங்களே நிறிைவுடையனவாக இன்றும் நம் இடையே வழங்கிவருகின்றன. - 三ベ- x - ヘ - (ஈ) ஆசிரியரின் ஆளுமை ஒவ்வேர் ஆசிரியனுக்கும் ஒவ்வொருவகையான நடை அமைகிறது. அவரவருடைய அறிவுத்திறனும் அனுபவக்கனிவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/55&oldid=751270" இலிருந்து மீள்விக்கப்பட்டது