பக்கம்:இலக்கியக் கலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இயல்புகள் - 41 நாம் பெறுகிறோம் என்பதை முன்னரே கண்டோம். இலக்கியம் நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்லுகிறது. நம்முடைய கற்பனைத்திறன், அப்பொழுது விரைந்து செயல்படுகிறது. இதனால், பெறற்கரிய ஒருவகைப் புத்துணர்ச்சியும், மனமகிழ்வும் உண்டாகின்றன. இவற்றோடு வேறோர் அனுபவமும் நமக்கு உண்டாகிறது. பரந்துபட்ட மனித இயற்கையை உள்ளவாறு உணர்வதற்கு இலக்கியம் பெரிதும் பயன்படுகின்றது. இதனால் தான், சார்த்ரே (Sartre) எனும் இருத்தல் நிலைக் (Existentialist) கொள்கையாளர், “தனக்கேயுரிய சூழ்நிலையைப் - பண்பாட்டுப் பின்னணித் திரையை இலக்கியம், வாசகர்களுக்கு மெல்ல விலக்கி வாழ்க்கையை முழுமையாகக் காட்டுகிறது; இதனால், இதனுடைய பொறுப்புகளை, அவர்களே ஏற்றுக்கொள்ளுமாறு அது துண்டுகிறது. இத்தூண்டுதல், ஒருவகைச் சமூகச் செயற் பாடாகும். எங்கும் பரவலாகக் கருதப்படும், கலை கலைக்காக” எனும் கோட்பாட்டிற்கு இது நேர்மாறானது. "இலக்கியம் ஒரு செயலாகும்; ந்டைமுறைப் பழக்கமாகும் அவற்றை மாற்றியும் திருத்தியும் அமைக்க ஒருவகைச் சூழ்நிலையை மெல்ல அது, திறந்துகாட்டுகிறது. 'இலக்கியம் கொள்கை அளவில் பரந்தவுள்ளத்தில் ஒழுக்க நிலையோடும் பரந்துபட்ட சமூகப் பழக்கநில்ையோடும் நெருக்கமான தொடர்புடையதாக இருந்து வருகிறது. மேலும், மக்களுடைய உரிமைகளை மதித்துப் போற்றுவதோடு அவற்றைப் பேணி வளர்க்கவும் வழிகாட்டுகிறது' என்று விள்க்கம் தந்துள்ளமை இங்குக் கருதத்தக்கது. இதனால், இலக்கியம் இன்புறுத்துவதோடு சமூக உணர்வை ஊட்டவும் வல்லது என்பது போதருகிறது. அறிவுத்துறைக்குரிய மனிதப்பண்பியல் (Humanities) நூல்கள் எல்லாம் வரலாறு, உளவியல், மெய்ப்பொருளியல் முதலியன தத்தம் துறைக்குரிய அறிவையே நமக்குத் தருகின்றன. அந் நூல்களின் மூலம் நாம் உணர்ச்சியைப் பெற இயலாது. ஆனால். பொதுவாக இலக்கியம் எனப் போற்றப்படும் நூல்கள் எல்லாம், நம் உள்ளுணர்வுகளைக் கவரும் ஆற்றல் உடையனவாக உள்ளன. இலக்கியத்தைப் படிக்கும்பொழுது, நம் உள்ளம், உண்ர்ச்சி வெள்ளத்துள் ஆழ்ந்துவிடுகிறது. இதனால், இலக்கியம் நம் உள்ளுணர்ச்சியைப் பெருக்குகிறது. ஓர் இலக்கியத்தைப் படிக்குந் தோறும் நாம் உணாச்சி வயப்படுவதால், என்றும் தெவிட்டாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/57&oldid=751272" இலிருந்து மீள்விக்கப்பட்டது