பக்கம்:இலக்கியக் கலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 . இலக்கியக் கலை தமிழருடைய ஒப்பற்ற குறிக்கோள்கள் பல. அவற்றுள் தலை சிறந்தவை, வாழ்க்கை வாழ்வதற்கே!, இனிய இல்வாழ்க்கையே’ சிறந்த அறவாழ்க்கை', 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை) 'கற்க விருந்தோம்பல் இறைவன் அடிசேர்தல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அன்பின் வழியது உயிர் நிலை என்பனவாகும். இவை சங்கப்பாடல்களில் தொடங்கி, இன்றுவரை வளர்ந்து வந்துள்ள தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும், யாதாகிலும் ஒரு வகையில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பற்ற, உண்மைகள் காலந்தோறும் புதிதுபுதிதாகத் தோன்றும் தலைமுறையினர்க்கு, வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகப் பயன்புட்டு வருகின்றன. எனவே, தலைமுறை தலைமுறையாக மறந்துவிடாமல் உயர்ந்த குறிக்கோள்களைப் போற்றிக் காத்து வரும் இலக்கியங்களின் சிறப்பை, நன்றியுணர்வோடு உலகு எங்கும் மனித இனம் போற்றிவருகிறது. -- மூவேந்தர்களுடைய அரண்மனைகளும், நகரங்களும், நாட்டு அமைப்புகளும் என்றோ அழிந்துபோயின. இன்றிைக்கு அவற்றைக் காண இயலாது. ஆனால், அவ்வேந்தர் காலத்திய மக்களுடைய இலட்சியக் கனவுகள் இன்னும் அழியவில்லை. சங்கத்தொதை நூல்களில் அவை திருக்கோயில் கொண்டுள்ளன். இவை யாவும். ஒர் இலக்கியத்தின் அகத்துறு பண்புகளாகும் ஒர் இலக்கியத்தின் வடிவத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். எந்தப் பொருளுக்கும் உள்ளடக்கமும், புறவடிவமும் உண்டு. இதைப்போன்றே இலக்கியத்திற்குப் பாடு பொருளாகிய அகவடிவமும், அவற்றை ஒன்றாக இணைத்து ஒரு தோற்றப் பொலிவை அளிப்பதாகிய புறவடிவமும் உள்ளன. இவ்விரண்டும் பொருத்தமாக அமைகின்றபொழுதே ஒருமைப் பாடுடைய இலக்கியப் படைப்பு வெளிப்படுகிறது. - புறத்துறு இயல்புகள். இலக்கியத்தில் வடிவிற்குரிய பண்புகள் சில உள்ளன. அவற்றை 'புறுத்துறு பண்புகள் எனக் கூறுவர். - . . . அதையின வடிவம் "நெடுங்காலம் முதல் இந்நூற்றாண்டுவரை கவிதையே நம் ட்டின் இலக்கியமாகக் கருதப்பட்டதால் அதனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/61&oldid=751277" இலிருந்து மீள்விக்கப்பட்டது