பக்கம்:இலக்கியக் கலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ಇಣಹಥಿಲಹ கலை உணர்ச்சிப் பெருக்கும் கற்பனைத்திறனும் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றன. வேறுவகையாகக் கூறவேண்டுமாயின் இவ்வகை இலக்கியம் தான் கூறவந்த கருத்தை வெளிப்படுத்திக் கவிதைை ஊடு பெர்ருளாகக் கொண்டதைத் தவிர வேறு இல்லை. . . . . . . . . கருத்திற்கு முதன்மை இடம் தரும் படைப்பு இல்க்கிய ஆசிரிய்ன், உணர்ச்சிவயப்படாமல், காரணகாரியத்தொடர்பு படுத்தி, படிப்போர் தெளிவாகப் புரிந்துகொள்ளத்தக்க வகையில், எதையும், எடுத்துரைக்க முயலுகிறான். - - இதனால், அறிவு இலக்கியம் முன்னர் நாம் கண்ட சார்பு இலக்கியத்தோடு பெரிதும் ஒத்ததாகத் தோன்றுகிறது. ஆற்றல் இலக்கியம் மனிதனுடைய உள்ளத்தை நெகிழச் செய்வதாகும். இவ்வகை இலக்கியத்தில், உணர்ச்சிக்கு முதலிடம் தரப்படுகிறது. மனிதனுடைய இன்பதுன்ப உணர்வுகளும், விருப்புவெறுப்புகளும் அச்சம் ஆர்வம் போன்றவையும், கலைநயம் தோன்றப் புனைந்துரைக்கப்படுகின்றன. இலக்கியத்தைப் படைக்கும் புலவனின் உணர்ச்சி அதில்வரும் கற்பனை மாந்தரின் உணர்ச்சி, அதைக் கற்பவர் பெறும் உணர்ச்சி ஆகிய மூவகை உணர்ச்சிகளுக்கும் இவ்வகை இலக்கியத்தில் முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. இவற்றால், கற்பவர் உள்ளத்தை நெகிழ் விக்கும் ஆற்றலும், கருத்தைக் கவரும் ஆற்றலும், இயல்பாகவே இவ்வகை இலக்கியத்தில் அமைகின்றன. இதனால், இந்த இலக்கியவகையை ஆற்றல் இலக்கியம் எனப் போற்றுகின்றனர். அனுபவகிலைப் பாகுபாடு பன்ட்ப்பாளி பெற்றுள்ள அனுபவத்தின் தன்மை, செறிவு, வகை, மனித உறவு, முயற்சித் திறன் ஆகிய ஐந்தின் ஆற்றல் களுக்கு ஏற்ப இலக்கியம் படைக்கப்படுகிறது. இந்த அனுபவ நிலையையும், பொருளின் இயல்பையும் கருத்தில் கொண்டு இலக்கியத்தை, ஐந்து வகைப்பட்டனவாகப் பாகுபடுத்துவர். (1) தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் படைக்கப் ப்டும் இலக்கியம். . . . . -- . . . - m இதனுள் முதன்மை இடம் பெறுவது தன்னுணர்ச்சிப் (Lyrics) பாடல்களாகும். அடுத்து இசைப்பாடல்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/68&oldid=751284" இலிருந்து மீள்விக்கப்பட்டது