பக்கம்:இலக்கியக் கலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை 51 பக்திப்பாடல்களும் அனுபூதிப்பாடல்களும் (Mystical poetry) இரங்கற்பாக் (கையறுநிலைச் செய்யுள், புலம்பல்) களும்; தன் சொந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் தன் வரலாறு (கவிதை, கட்டுரைகளும்) பயணி நூல்களும். வாழ்க்கை விளக்கமும். கலை-இலக்கியத் திறனாய்வுகளும் இந்த வகையைச் சேர்ந்தன வாகும், இளங்கோவடிகளின், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களும் இதனுள் அடங்கும். . . (2) மனித இனத்திற்குப் பொதுவாக அமைந்த வாழ்க் கையைப் பற்றிய இலக்கியம். தற்சார்பற்ற நிலையில் படைக்கப் படும் திருக்குறள் போன்ற அறநூல்கள், காப்பியங்கள், வரலாறு, அம்மானைப்பாடல், செய்யுள் உரைநடை வழியமைந்த வியத்தகு கதைகள், புதினம், நாடகம் முதலியன இந்தவகையைச் சேர்ந்தனவாகும், (3) பல்வகையாக விரிந்து கிடக்கும் சமுதாயத்தைச் சித்தரிக்கும் இலக்கியம் வருணனையும் விளக்கமும் கிளத்தலும் (Narrative) நிறைந்த இலக்கியங்கள் யாவும் இதனுள் அடங்கும். கம்பனின் இராமகாதை போன்ற காப் பியங்களும், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடு கடாம் போன்ற வருணனைக் கவிதைகளும், பயண நூல்களும் இதனுள் அடங்கும். - (4) இயற்கைபற்றி எழுந்த இலக்கியம். இயற்கையை, இயற்கையின் எழிலார்ந்த இன்பத்திற்காகப் பாடும் பழக்கம் (அழகின்சிரிப்புப் போன்றவை), தமிழ் இலக்கியமரபிற்குப் புதியதாகும். மனித வாழ்க்கையின் பின்னணியாகவே, இயற்கை சித்தரிக்கப்படுவது பண்டைத் தமிழ்மரபு. : திருமுருகாற்றுப்படை முதலான ஆற்றுப்படைப் பாடல் களும் நூல்களும் இதனுள் அடங்கும். முல்லைப்பாட்டு முதலான ஐந்திணைப் பாடல்கள், காப்பியங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றுள்ள நாட்டுப்படலம், ஆற்றுப்படலம், நகரப்படலம், 'சங்கேர்ய்மலை எழுபது, குற்றாலக்குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் இந்த வகையைச் சேர்ந்தனவாகலாம். (3) இலக்கியம் பற்றியும் கலை நயம் பற்றியும் இயற்றப் பட்டுள்ள இலக்கியங்கள் இந்தவகைப் பாடல்களுக்குச் சார்பு இலக்கியங்களே அடங்கும். அகப்பொருள் புறப்பொருள் இலக்கண நூல்கள் தண்டியலங்காரம், உவமான சங்கிரகம் போன்ற அணி இலக்கண நூல்கள். பஞ்சமரபு, கூத்தநூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/69&oldid=751285" இலிருந்து மீள்விக்கப்பட்டது