பக்கம்:இலக்கியக் கலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நூல் வேண்டியிருந்தது. பத்தாண்டுகட்கு முன்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தார் பி. ஒ. எல். (ஆனர்ஸ்) தேர்வுக்கு இலக்கியத் திறனாய்வைப் பாடத்திட்டத்தில் சேர்த்தனர். அதற்கு முன்னர் யாண்டும் பாடமாக அமையாத இதற்கு அவர்களே பாடத் திட்டமும் அமைத்தனர். ஆங்கில இலக்கியத் திறனாய்வை ஒட்டி இத் திட்டம் வகுக்கப்பெற்றது. பச்சையப்பன் கல்லூரி ஒன்றில்தான் பி. ஒ எல். (ஆனர்ஸ்) வகுப்புக்கள் நடைபெற்று வந்தனவாகலின் இப்பகுதியை எடுத்து நடத்தும் வாய்ப்பு எனக்கு நல்கப்பட்டது. இப்புதுவழியில் முதன்முதலாகச் செல்லு மாறு என்னை ஊக்கிய பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் காலஞ்சென்ற திருவாளர் மோசூர்-கந்தசாமி முதலியார் அவர்கட்கு யான் என்றும் கடமைப்பட்டவன். பிறகு கலைமகள் கலைக்கதிர் என்ற இதழ்களில் கட்டுரைகள் தொடர்ந்து வந்தன. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் சிறந்த தமிழ் நூல்களை வெளியிடுவதில் பன்னெடுங் காலமாக உழைப்பவர்கள். ஆகவே அவர்கள் இந்நூலை அச்சிட்டு வெளியிட்டமைக்கு என் நன்றி உரியதாகும். -: ஆங்கிலத்தில் உள்ள நூல்களின் துணை கொண்டு அவற்றைத் தமிழ் மொழிக்கு ஆக்க முயன்றுள்ளேன். இரண்டு மொழிகளின் பண்பாடும் வேறாகலானும் பற்பல இடங்களில் தமிழ் இலக்கிய அனுபவத்திற்குத் தனிப்பட்ட சட்டங்கள் தேவைப்பட்டன வாகலானும் கூடுமானவரை தமிழ் மரபு கெடாதபடி எழுதியுள்ளேன். முதன் முயற்சியாகலின் குறைகளும் தவறுகளும் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்புடைப் பெருமக்கள் எடுத்துக் காட்டினால் திருத்திக்கொள்ள ஏதுவாகும். 1 33 ஆம் ஆண்டு இந்நூல் முதன் முறையாக 6ណនាអ៊ី வந்ததிலிருந்து பல பதிப்புகள் வெளிவந்துள்ளன என்றாலும் திறனாய்வுக் கலை வளர்ந்துள்ள வேகத்திற்கேற்ப வேண்டுமான திருத்தங்களும் விரிவும் செய்யப்பெறாமலேயே பதிப்புகள் வெளி வந்தன. மேலும் 1956 முதல் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு வேறு துறைகட்கு யான் சென்றுவிட்டமையின் இதில் தக்க கவனம் செலுத்திப் புதுக்க இயலாது போயிற்று. х

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/7&oldid=751286" இலிருந்து மீள்விக்கப்பட்டது