பக்கம்:இலக்கியக் கலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 6 இலக்கியமும் மரபுகளும் பழமையும் புதுமையும் எல்லாவற்றிலும் புதுமையை விரும்புவது இக்கால இயல்பு பழமை என்று கூறின உடனேயே சீறிவிழும் இயல்புடையோர் பலர். ஆனால் 'பழமை அவ்வளவு சுலபமாக நம்மை விட்டு நீங்கி விடுவதாகவும் தெரியவில்லை. பழமை பாராட்டுவதே மரபின் அடிப்படை. உலகிடை உள்ள பல பொருள்களில் நாம் மரபையே பின்பற்றுகிறோம். அதிலும், கலைகள் எல்லாம் மரபை ஒட்டியே நிலைத்துள்ளன், மரபு மட்டும் இல்லையானால் ஒருவர் ஆக்கிய கலையை, மற்றவர் அனுபவிக்க முடியாமல் போய்விடும். இலக்கியம் மரபுகளை ஒட்டி நிலைத்திருக்கும் ஒரு கலையாகும். - ஏனைய சிற்பம், ஒவியம் ப்ோன்ற கலைகளைக் காட்டிலும் இலக்கியத்திற்கு மரபுகள் அதிகம் உண்டு, சிற்பமும் ஓவியமும் பருப்பொருள்களின் உதவிகொண்டு இயங்குகின்றன. கல், திரைச்சீலை, வண்ணம் என்பவை இக் கலைகட்கு இடைநிலைப் பொருள்கள் என்று கூறப்படும் ஆனால் இலக்கியம், இசை என்ற இரண்டு கலைகளிலும் பருப்பொருளாகிய இடைநிலைப் பொருள் ஒன்றுமில்லை. ஆகவே, இலக்கியத்தில் கட்டுப்பாடு இன்றியமையாததாகிறது. ஏனைய கலைகளில் கட்டுப்பாடு அதிகம் இல்லையென்றாலும் பெருந்தீங்கு ஒன்றுமில்லை. கலைஞன் விருப்பம் போல் ஒன்றுஞ் செய்துவிட முடியாது. செய்தாலும் அது கேலிக் கூத்தாக முடியுமே தவிரக் கலை என்ற பெயரைத் தாங்கி நில்லாது. இலக்கியத்தில் கலைஞன் விருப்பம் போல் போகத் தொடங்கினால் அதற்கு எல்லை எங்கே என்று கூற முடியாமற் போய்விடும். நாளடைவில் இலக்கியம் கலைத் தன்மையை இழந்துவிடும். இத்தகைய அல்லல்களைத் தடுக்கவே கட்டுப்பாடு இன்றியமையாததாகிறது. " ' சொல்லும் பொருளும் மரபு என்றால் 67675T? கட்டுப்பாடே வேறொரு வகையாகக் - குறிக்குமிடத்து மரபு' என்று கூறப்பெறுகிறது. ஆனால், கட்டுப்பாடு ஒருவாறு நீக்கமுடியாததாக அமைகிறது. மரபு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/71&oldid=751288" இலிருந்து மீள்விக்கப்பட்டது