பக்கம்:இலக்கியக் கலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இலக்கியக் கலை அவ்வாறில்லை. பழங்காலந் தொட்டுப் பெரியோர்கள் பொருள்களை எல்வாறு குறித்தனர்? சொற்களால்தாமே? அவர்கள் குறித்த பொருளுக்கும் கூறிய சொற்களுக்கும் என்ன தொடர்பு இருந்தது? உண்மையைக் கூறவேண்டுமானால், ஒன்றுமில்லை எள்றுதான் சொல்ல வேண்டும். மனிதன் என்ற சொல்லுக்கும் மனிதன் என்ற பொருளுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? மனிதன் என்ற தமிழ்ச்சொல்லைக் கூறினவுடன் சீனாக்காரன் ஒருவன் அது குறிக்கும் பொருளை அறிந்துகொள்ள முடியுமா? அப்படி இருக்க இப்பொருளுக்கு இப்பெயர் என்று குறிப்பிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது? ஒன்றுமில்லைதான். ஆனாலும் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பை" உடன்படாவிடில் உலகம் நடைபெறாது. ஒரு மொழி பேசும் கூட்டத்தாரில் பலர் கூடி ஒரு பொருளை ஒரு சொல்லால் ஒரு காலத்தில் குறிப்பிட்டனர்? அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஏன் ஏற்றுக்கொண்டனர்? அவர்கட்கும் அதன் காரணம் தெரியாது. நாமும் அதனை ஆராய முடியாது. இதனையே மரபு என்று குறிப்பிடுகிறோம், பெரியோர் எவ்வழிச் செப்பினர் அவ்வழிச் செப்புதல் மரபு என்று வரையறை செய்தும் வைத்தனர். இதன் காரணம் ஆராய முடியாத ஒன்றா யினும். இதன் இன்றியமையாமையை யாரும் ம்றுக்கத் துணிந்த தில்லை. முன்னர்க் கூறிய மனிதன் என்ற சொல்லைக் கேட்ட தமிழின் எவனும், வீட்டையும் பசுமாட்டையும் நினைத்துக் கொள்வதில்லை. மரபின் வன்மை இத்தகையதாகும். இலக்கண்ம். பெயர்களைச் சொல்லளவில் காரணப்பெயர்கள் என்றும் இடுகுறிப்பெயர்கள் என்றும் குறிப்பிடலாமே தவிர. பொருளோடு தொடர்புபடுத்திக் காரணப் பெயர் என்று கூறத் தக்கது ஒன்றுமில்லை. ' மரபும் வாழ்வும் இலக்கியத்திலும் பல்வகை மரபுகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இலக்கியத்தில் மட்டுந்தானா மரபை ஏற்றுக் கொள்கிறோம். வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியிலும் மரபை எதிர்ப்படுகிறோம். ஒரு நாடகத்தைப் பார்க்கப் போகிறோம். அது அநேகமாக மூன்று நேரத்தில் முடிந்துவிடுகிறது. வாழ்க்கையில் மூன்று மணி நேர்ம் ஒரு பெரிய கால அள்வு அன்று. ஆனாலும் நாடகத்தில் ஒரு தல்வனின் வாழ்க்கை முழுவதையுமன்றோ கிண்டோம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/72&oldid=751289" இலிருந்து மீள்விக்கப்பட்டது