பக்கம்:இலக்கியக் கலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. இலக்கியக் கலை ஊட்டுவதை விரும்பாமல் உதைக்க, மலைகளும் குளிரால் நடுங்கும் குளிர்நாளில் முசுண்டை பூக்க, பீர்க்கம்பூ புதர் தோறும் மலர, பசிய காலையுடைய கொக்கின் கூட்டம் ஈரமணலில் செவ்வரி யினையுடைய நாரையுடன் இருந்து மீன்களைக் கவர.) இது. நாம் கிராமாந்தரங்களில் என்றுங் காணக்கூடிய ஒரு கர்ட்சியின் வருணனைதான். என்றாலும் இவ் வருணனையில் உயிர்த்துடிப்பு இருக்கிறது. பிற்கால இலக்கியங்களில் இவ் வன்க வருணனைக்குப் பதிலாக, உயர்வுநவிற்சியணியில் அனைத்தும் இருத்தலைக் காணலாம். எனவே, பிற்கால நூல்களின் வருணனைகளிற்கூட இம் மரபு பிறழ்ந்து போதனைக் கர்ண்கிறோம். பாத்திர மரபு இனிக் காணவேண்டுவது பாத்திரங்களைப் படைக்கும் முறையாகும். இலக்கியம் சிறக்க உதவும் பலவற்றுள் பாத்திர மும், ஒன்று. உலகிடைத் தோன்றிய இலக்கியங்களில் ப்ாத்திரம் இல்லாத இலக்கியமே இல்லை என்று கூறி விட வாம். தமிழ் இலக்கியங்களில் காட்சியளிக்கும் பாத்திரங்கள் அனைத்தும் ஒரு மரபை ஒட்டியே காட்சி தருகின்றன. சங்கப் பாடலை எடுத்துக்கொண்டால், எத்தனை பாத்திரங்கள்: எண்ணத் தொலையாத அவற்றுள், தலைவன் தலைவி, தோழன், தோழி. நற்றாய், செவிலித்தாய், கண்டோர், அந் தணர், பாணன், விறலியர் என்பவர் ஒரு சிலராவர். இப் பாத்திரங்கள் அனைத்தும் வாழ்க்கையில் இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. இலக்கிய மரபுப்படி, ஒவ்வொரு தலைவனுக்கும் ஒருபாங்கன் உண்டு. ஆனால், வாழ்க்கையில் இது இயலாத காரியம் என்று கூறவும் வேண்டுமா? பின்னர் ஏன் இலக்கியத்தில் இவ்வாறு உளது? வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் தொடர்பு இல்லையா? இருக்க்த்தான் செய்கிறது. வாழ்க்கையில் ஒவ் வொரு மனிதனுக்கும் குறைந்த அளவு ஒரு நண்பனாவது இருக்கிறான் அல்லனோ? இவ்வாறு வரும் நண்பனைத்தான் இலக்கிய மரபு பாங்கன் என்று குறிக்கிறது. உலகிடைப் பட்ட பல்வேறு அனுபவங்களையும் கூறவேண்டிய கடப்பாடு உடைய கவிஞன் இங்ஙனம் பல்வேறு இயல்பும் மனநிலையும் உடைய பல பாத்திரங்களைப் படைத்துக் கொள்ளுகிறான். பலரும் படைக்கும் பாத்திரங்கள் பலபடித்தாக இருப்பின் அதனால் சிறந்த பயன் விளையாமைகருதியே, மரபுவகுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/76&oldid=751293" இலிருந்து மீள்விக்கப்பட்டது