பக்கம்:இலக்கியக் கலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் மரபுகளும் 53. கொள்கிறான் கவிஞன், தலைவியைவிட்டு, ஏதோ செயலாற்றச் சென்ற தலைவன் மீளவில்லை. இயற்கையாகப் பெண்மக்கள், ஆண்களைவிட அதிகம் வருந்துபவர்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் வருத்தம் வெளிப்படுகிறது. தலைவியின் வருத்தம் எவ்வளவர்னாலும் தலைவனிடம் நேரே கூறுவது அழகன்று. எனவே, ஒரு தலைவி பாணனிடம் கூறுவதாக அமைகிறது ஒரு ஒரு பாடல். பாணன் தலைவியிடம் வந்து பிரிவாற்றாமையால் உள்ள வருத்தம் இருவருக்கும் உரியதுதானே? அவ்வாறு இருக்க நீர்மட்டும் இவ்வளவு வருத்தம் காட்டக் காரணம் என்னை? என்று கேட்டுவிட்டான். என்ன கூறுகிறாள் தலைவி? பாருங்கள்: கருவி வானங் கார்சிறந் தார்ப்பப் பருவஞ் செய்தன பைங்கொடி முல்லை பல்லான் கோவலர் படலைக் கூட்டும் அன்பில் மாலையும் உடைத்தோ அன்பில் பாண்! அவர் சென்ற நாடே." (ஐங்குறு நூறு 476) முல்லையும், கோவலரும், மாலைக்காலமும், அவரை நான் மறந்தாலும் மறக்கவிடவில்லையே என்கிறாள் தலைவி. பாணன் என்ற ஒரு பாத்திரம் ஏற்பட்டதால்தான் இவ்வழகிய பாடல் கிடைத்தது. இப் பாத்திரங்கள் சங்ககாலத்தில் வாழ்க்கையோடு ஒட்டியே படைக்கப்பெற்றுள்ளமை கண்கூடு. சங்க இலக்கியத்தை அடுத்து வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு பெருங்கர்ப்பியங் களிலும் பாத்திரங்கள் பெரும்பாலும் மரபு பற்றியே படைக்கப் பெற்றுள்ளன. இம் மரபு தவறாமல் இருப்பதற்காகவே, தொல்காப்பியம் பெரிய அணைகள் போட்டுத் தடைசெய்கிறது. மரபியல் என்ற ஒர் அதிகாரமும் செய்துவைத்தது. என்றாலும் என்ன? காலம் செல்லச்செல்ல இம்மரபு ம்ெல்ல மாறி, மற்ைபத் தொடங்கிற்று. மாறிய இவ்வியல்புக்குச் சிந்தாமணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பிறகு ஒவ்வொரு நூற்றாண்டிலும் இம் மரபுமாறிப் போவதைக் கம்பராமாயணம், பெரிய புராணம் முதலிய பேரிலக்கி யங்களிற் காணலாம். தனி மனிதனின் மதிநுட்ப்ம் காலத்தோடு ஒட்டிச் செயல்படுகிறது. சங்கப்பாடல்களில் அகத்தினைபற்றிய பாடல்கள் அக்கால மரபுடன் உள்ளமையின், தனி அழகுடனும் சுவையுடனும் உணர்ச்சியுடனும் உள்ளன. ஆனால் அகத்திணை மரபுகளை மட்டும் வைத்துக்கொண்டு, பிற்காலத்தே எழுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/77&oldid=751294" இலிருந்து மீள்விக்கப்பட்டது