பக்கம்:இலக்கியக் கலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இலக்கியக் கலை கோவை முதலிய நூல்களில் பழைய பாடல்களில் உள்ள உணர்ச்சி இல்லை. சிறிய அளவுள்ள உணர்ச்சியை வைத்துக்கொண்டு நானூறு பாடல்கள் பர்டவேண்டும் என்றால் பல பாடல்கள் உயிரில்லாமல் இருக்கவே செய்யும். ஒருவகைப் பாடலுக்கு ஏற்பட்ட மரபு, பிறிதொரு வகைக்கு ஏலாது என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக் காட்டு, இவற்றை அகப்பாடல்கள் எனல் பொருந்தாது. - பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய கம்பனுக்குப் பிறகு, பெருங்காப்பியங்கள் தமிழில் ஒன்றுந் தோன்ற வில்லை. தோன்றிய சிற்றிலக்கியங்களும் வடமொழிச் சார்பு மிகுந்து, தமிழ் மரபு பிறழ்ந்து பாத்திரங்களைப் படைக்கலாயின. கோவை, உலா, கலம்பகம் போன்ற நூல்களிலும் தலைவன், தலைவி என்ற பாத்திரங்கள்தாம் உள்ளனர் என்றாலும் சங்ககாலப் பாத்திரங்கட்கும் இவர்கட்கும் கடலனைய வேற்றுமையைக் காணலாம். இன்னும் பிற்காலத்தில் தோன்றிய பல த ல புராணங்கள் மக்களைப்பற்றிப் பேசாமல் தேவர்களையும், இந்திரனையும் துணைக்கு அழைத்தன. அதன் பயன் நன்கு தெரிந்ததே. சிறந்த நூலாகிய குற்றாலத் தலபுராணம் போன்ற இலக்கியமும், இதனால் செல்வாக்கு அற்றுப்போயிற்று. மரபு பிறழ்ந்த பயன் சங்க காலத்திலிருந்து இன்று இலக்கியம் அடைந்துள்ள மாறுதல்களைக் கண்டால், கீழ்வரும் உண்மைகள் தெற்றென விளங்கும். காலம், மாறவே மக்கள் வாழ்க்கையும், நாகரிகமும், குறிக்கோளும் மாறலாயின. அதன் பயனாக இலக்கியமும், அதன் பாத்திரங்களும் மாறின. பழையன கழிந்தன; புதியன புகுந்தன. ஆனால், சிறப்பு அடையவில்லை. காரணம் இலக்கிய மரபு பின்பற்றப்படாமையே ஆகும். - • . ஆனால், தாம் இயற்றப்பட்ட காலத்தின் நாடித் துடிப்பைப் புலப்படுத்துகின்றன; மக்களின் எண்ணப்போக்கைப் பிரதிபலிக் கின்றன. இலக்கிய வளர்ச்சிக்கு மாற்றம் தேவை. ஆனால், அது அடிப்படையையே அகற்றிவிடுவதாக அமையக்கூடாது. சிறந்த க்விஞன், தன்மைதிநுட்பத்தால் தேவையான சிற்சில மாற்றங் களைச் செய்கிறான். அதனால் இலக்கியப்படைப்பு வலிவும் ப்ொலிவும், ஏரும் எழிலும் பெறுகின்றன. சிலப்பதிகாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/78&oldid=751295" இலிருந்து மீள்விக்கப்பட்டது