பக்கம்:இலக்கியக் கலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 7 வாழும் இலக்கியம் எது இலக்கியம்? இலக்கியம் என்றால் என்ன? சிலப்பதிகாரம், கம்பராமாயணம், இந்திய சரித்திரம், பஞ்சாங்கம் என்ற இவற்றில் இலக்கியம் என்பன யாவை என்று கேட்டால் எளிதில் விடை கூறிவிடலாம். அச்சொல்லின் பொருளை எடுத்து இலக்கணம் கூறி விளக்குவது கடினமாக இருக்கலாம்; எனினும், அச்சொல் எதனைக் குறிக்கிறது என்று ஒருவாறு கூறமுடிகிறதன்றோ? பஞ்சாங்கமும் சிலப்பதிகார மும் நூல்கள் என்ற பெயருள் அடங்குமேயெனினும் இலக்கியம் என்ற பெயருக்கு உரியது சிலப்பதிகாரமே என்று எளிதில் கூறமுடிகிறது. ஆனால். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வளவு எளிதாக விடை கூற முடியாது. திருக்குறள், ஆசாரக் கோவை என்ற இரண்டும் நீதி நூல்கள்தாம். ஆனாலும் இவை இலக்கியமா என்றால் திருக்குறள் மட்டுமே அப்பெயர் பெறும் என்றும், ஆசாரக் கோவை இலக்கியமன்று என்றும் கூறவேண்டும். என்றாலும் இங்ங்னம் கூறுவது எளிதன்று. உயர்ந்த நூல்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்பட்டு வந்த ஆசாரக்கோவையை, இன்று இலக்கியமன்று என்று கூறவேண்டுமானால் தக்க காரணங்கள் வேண்டும். இந்நிலையில் இலக்கியம் என்றால் என்ன என்ற வினாவிற்குத் தக்க விடை கூறவேண்டும். "இலக்கியம் என்றால் என்ன என்பதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து வின்செஸ்டர் என்ற பெரியார் கீழ்க்காணும் முடிவுகளைக் கூறுவது நினைவில் இருத்தத்தக்கது: - - (1) உணர்ச்சியே இலக்கியத்தின் இன்றியமையாத உறுப்பாகும். சிறந்த இலக்கியத்தில் அதுவே பயனாகவும், ஏனையவற்றில் அது இடிைப்பட்ட ஒன்றாகவும் இருக்கும். வேறு பயனை விளைக்க இவ்வுணர்ச்சி.கருவியாக்கப்படுவதும் சாதாரண இலக்கியங்களில் உண்டு. (2) கற்பன்ை இல்லையாயின் உணர்ச்சிகளைத் தாண்ட இயலாதாசுவின் அதுவும் இலக்கியத்தின் த்லையாய உறுப்பாகும், .*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/80&oldid=751298" இலிருந்து மீள்விக்கப்பட்டது