பக்கம்:இலக்கியக் கலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

أي : வாழும் இலக்கியம் శ్రీశ్రీ (3) இலக்கிய ஆசிரியனின் சிந்தனை, அடுத்துள்ள உறுப்பாகும். அவனுடைய எண்ணத்தை அல்லது ೯ಕ್ನಿಕ್ಸಣಣಬಿ பிறருக்குப் பங்கிட்டுத் தரவே கலை தோன்றுகிறதாகலின் இதுவும் ക്രേങ്ങഖ. : (4) கலையின் வடிவம் என்பது பயனர்க இராவிடினும் அவனுடைய உணர்ச்சி எண்ணம் என்பவற்றை வெளியிடும் கருவி. யாகவின் இதுவும் மிக இன்றியமையாத ஒன்று. இலக்கியம், தான் கூற எடுத்துக்கொண்ட பொருளிலும், அதனைக் கூறும் வகையிலும் பொதுத்தன்மையுடையதாக இருத்தல் வேண்டும், அஃதாவது அனைவருக்கும் அது இன்ப மூட்டுவதாக இருத்தல் வேண்டும். சரித்திரம், தத்துவ சாத்திரம் பொருளாதார சாத்திரம் என்பவை ஒரு சிலராலேயே சுற்கப்படு கின்றன அல்லவா? அந்த ஒருசிலரும் இவற்றைக் கற்பதால் அடையும் பயன், ஒன்றைக் கருதிக் கற்கின்றனரேயன்றிப் பயின் கருதாது இன்பம் ஒன்றையே கருதி இவற்றைக் கற்பதில்லை. ஆனால், இலக்கியம் ஒன்றைத்தான் மக்கள் சமுதாயம் வேறு பயன் கருதாமல், கற்பதால் பெறும் இன்பம் ஒன்றையே பயனாகக்கொண்டு கற் கின்றது. இலக்கியம்தரும் இன்பத்தை முருகியல் இன்பம் என்று கூறுவர். வாழ்வும் இலக்கியமும் கற்றுத் தீரவேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு ஒருவரும் இலக்கியத்தைக் கற்பதில்லை. பின்னர் எக்காரணத்தால். இலக்கியத்தை மக்கள் விரும்புகின்றனர்? இலக்கியம் ஆழ்ந்து அகன்று உள்ளதும் என்றும் நிலைபெறுவதுமான மனிதப்பண்புடன் தொடர்புடையதாகலின், மனிதனால் என்றும் விரும்பப்படுகி தது. சிறந்த இலக்கியம் மனிதனுடைய வாழ்க்கைத் தத்துவத்திலிருந்து தோன்றுவதாகலின் அதனைக்கற்கும் நாம் ஒரு புதிய வாழ்க்கை பற்றி நெருங்கிய முறையில் அறியவும் உணரவும் தலைப்படுகிறோம். இலக்கியம், வாழ்க்கையில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவத் தையும், பேருண்மைகளையும் வெளியிடுவதாகும். ஒவ்வொரு சந்தர்ப்பமும் சூழ்நிலையும், நிகழ்ச்சியும் முன்னர் வாழ்ந்த மனிதர்களை, எவ்வாறு தாக்கின என்பதையும், அத்தாக்குதல் களின் போது அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதையும் அறிவிக்கும் அனுபவக்கருவூலம் இலக்கியம் என்று ஆவின் மிகையாகாது. வாழ்ந்து கிட்டும் வாழ்க்கையைச் சொற்களால் கூறுவதே இலக்கிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/81&oldid=751299" இலிருந்து மீள்விக்கப்பட்டது