பக்கம்:இலக்கியக் கலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

៩៨ இலக்கியக் கலை பிறப்பு இனி, இறுதியாகக் காணவேண்டியது இலக்கியம் எவ்வாறு பிறக்கிறது என்பதுதான், இலக்கியம் பிறப்பதற்கு வித்து வாழ்க்கையில்தான் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியோ அன்றிப் பல நிகழ்ச்சிகளோ விதையாக அமைகின்றன. ஒரு நிகழ்ச்சியைக் காண்பவர் அல்லது கேட்பவர் அனைவருக்கும் ஒரே மாதிரியான கருத்துத் தோன்றுவதில்லையே? எனவே, இலக்கிய ஆசிரியன் அறிவும் இத்தகைய ஒரு நிகழ்ச்சியில் ஈடுபட்டு ஒரு வகையில் அதனை அனுபவிக்கிறது. இவ்வனு பவத்தில் அவன் பெறும் உணர்ச்சி எதுவேர் அதனை நாமும் பெறுமாறு செய்ய அவன் விரும்புகிறான். அவன் பெற்ற உணர்ச்சியைக் கற்பனையுடன் கலந்து பெருக்குகிறான். இன்றேல், அவனது உணர்ச்சி சிறப்பிழந்து சுருங்கிவிடும். எனவே, நிகழ்ச்சி, அதில் தோயும் அவன் அறிவு. அதனைப் பெருக்கும் அவனது கற்பன்ை என்ற மூன்றுந்தாம் இலக்கியம் தோன்ற வ்ழி வகுக்கின்றன. அவன் பெற்ற அவ்வுணர்ச்சிக்கு ஒரு வடிவு கொடுத்து, அதனை நாமும் அனுபவித்து அவன் பெற்ற உணர்ச்சியை நாமும் பெறவைப்பதே அவன் இயற்றும் இலக்கி யத்தின் நோக்கம். இவ்வாறுதான் இலக்கியம் பிறக்கிறது. இந்த உலகில் தோன்றிய எந்தப்பொருளும் காலதேவனின் கையிற்சிக்கி அழியாமல் இருப்பதில்லை. நிலையாமையே பொருள் களின் அடிப்படையாய் அமைந்துள்ளது. இப் பரந்த உலகில், இத் தகைய உலகிலும் தாம் நிலைப்பதற்குரிய வழியை, ஆதி மனிதன் முதல் யாவரும் நாடியே வந்தனர். இந் நாட்டத்தில் ஒரளவு வெற்றியும் பெற்றனர். தம் பூதவுட்லோடு நிலைத்துவாழ வழி இன்றாயினும். புகழையாவது நிலைநிறுத்திவிட்டுச் சாவ விரும்பினர், மனிதருள் சிலர். இதனாலேயே போலும், மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர். தம்புகழ் கிறீஇத் தாம்மாய் தனரே (புறம் 165) என்ற புறப்பாடல் தோன்றிற்று. தன் புகழை நிறுத்திவிட்டு * இறந்த மனிதன், ஒருவாறு சாவை காலதேவனை, வென்றவனே ஆவான். சாவை வெல்லும் புகழைத் தேட் மனிதன் கைக்கொண்ட வழிகள் பல. அவற்றுள் ஒன்று சிற்ந்த இலக்கியத்தைப் படைத்து, உலவ விட்டமையாகும். படைத்த மனிதன் இறந்து பன்னெடு நாள்கள் கழித்தும் அவ்விலக்கியம் நின்று நிலவலாயிற்று. ‘சிறந்த நூல் என்பது ஒரு பெருங்கலைஞனின் உயிர்த்துடிப்பாகும். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/84&oldid=751302" இலிருந்து மீள்விக்கப்பட்டது