பக்கம்:இலக்கியக் கலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் இலக்கியம் 67 வானாளைக் கடந்து பல காலம் நிலைபெற்று வாழ்வதற்காகப் பக்குவம் செய்யப்பட்ட அவனுடைய உயிர் அனுபவமாகும். அது." என்பது மில்டன் என்ற பெருங் கலைஞனின் அனுபவச் சொற்கள். நிலைபேறு எதிர்பாராதவை நிகழ்தலே இவ்வுலகின் இயல்பு. தனக்குப் பின் நிலைக்கும் என்ற கருத்துடன் மனிதன் விட்டுச் சென்ற இலக்கியங்களிற் சிலவற்றைக்கூட கால் தேவனின் வலை பற்றி இழுக்கலாயிற்று. உலகிடைத் தோன்றிய நூல்க்ள் இலக்கியங்க்ள் என்ற அனைத்தும் நிலைபெறவில்லை ஒரே காலத்தில் தோன்றிய அனைத்துங்கூட, நிற்கவில்லை. ஒரே மனிதன் தோற்றுவித்த நூல்கள் அனைத்தும் நின்றன என்றுகூடக் கூறுதற்கில்லை. இத் தன்மை ஓர் உண்மையை அறிவுறுத்துகிறது. உலகத்தில் தோன்றி, வாழ்ந்த பல்வேறு உயிரினங்களுங்கூட நிலைபெற்று வாழவில்லை. பல இனங்கள் அழிந்தன் பல மாறின; பல புதிய வடிவுடன் நிலைபெற்றன. இத்தகைய இயல்பிலிருந்து உயிர் நூலார் ஒரு சட்டம் வகுத்தனர். அதனை இயற்கையின் மாற்றமுடியாத சட்டங்களுள் ஒன்று என்றும் கூறினர். அதுவே நிலைபேற்றுச் சட்டம் எனப்படும். உலகில் வாழும் ஒவ்வோர் உயிரும் தன் நிலைபேற்றிற்கு ஒய்ாது போரிடுதலும் அப் போரில் வலிமை மிகுந்தவை எஞ்சுதலும் இயற்கை எனபதே அம் முடிபு ஆகும். இச்சட்டம் உயிர்கட்கு மட்டுமல்லாமல், இலக்கியங்கட்குங்கூட ஓரளவு பொருந்தும். இதுவரை ஒவ்வொரு மொழியிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் தோன்றியுள்ளன. நம் தமிழ்மொழியைப் பொறுத்த மட்டில் எத்துணை இலக்கியங்கள், இன்று நிலைத்துள்ளன? கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றிய பல பாடல்கள் இன்றும் வாழுகின்றன. ஆனால், இவற்றின் பின்னர்ப் பல காலங் கழித்துத் தோன்றிய அநேக நூல்கள் இருந்த சுவடுந் தெரியாமல் மறைந்துவிட்டன. பழம்பாடல்கள் இன்னும் வாழக் காரணம் என்ன? இவை தோன்றிய் நாள்தொட்டு இன்றுவரை எத்தனை வேற்று நாகரிகங்கள், காற்றுக்கள் தமிழ்நாட்டில் புகுந்தன? எத்தனை சமயக் கோட்பாடுகள் புகுந்தன? என்றாலும் என்ன? இவ் இலக்கியங்களின் நிலையேற்றை அவ் வேற்று நாகரிகங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/85&oldid=751303" இலிருந்து மீள்விக்கப்பட்டது