பக்கம்:இலக்கியக் கலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இலக்கியக் கலை ஒன்றுஞ் செய்ய இயலவில்லை. முன்னர்த் தோன்றிய இவை வாழப் பின்னர்த் தோன்றிய நூல்கள் அழியக் காரணம் யாது? தமிழரின் கவனக்குறைவால் ஓரளவு அழிந்தமை உண்மை தான். ஆனால், பல இலக்கியங்கள் நிலைபேற்றுக்குரிய பண்பாட்டைப் பெற்றிருக்கவில்லை; அதனாலேயே மறையலாயின இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரமும் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சிந்தாமணியும் வாழ, இவற்றின் பின்னர்த் தோன்றிய வளையாபதி முதலியவை அழிவானேன்? நிலைபேற்றுப் போராட்டத்தில் சிலப்பதிகாரம் போன்றவையே வெற்றிபெற்றன போலும்? வளையாபதி போன்ற நூல்களிலும் விஞ்ஞான மெய்ம்மைகளைப் பேசும் நூல்களிலும் உள்ள தத்துவங்கள் பலராலும் அறியப்பட்டபிறகு அவை நிலைக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. இம்மெய்ம்மைகளை வேறு முறைகளில், வேறு நூல்கள் பேசிவிடுகின்றன. யாக்கை நிலையாமையைப்பற்றி வளையாபதியார் கூறியதில் வியப் பொன்றும் இல்லை. ஆனால், அவர் அதனைக் கூறிய முறை கொண்டே அந்நூலை இலக்கியமா இல்லையா என்று ஆய்கிறோம். அவர் கூறிய முறையைக்காட்டிலும் சிறந்த முறையில் அதனைப் பிற்காலத்தார் கூறிவிட்டால் அப் பழயநூல் அழிந்துவிடுகிறது. இதனால் ஓர் அழகிய முடிபு கூறுகிறார். இலக்கியம்பற்றி 'வின்செஸ்டர் : "எந்த ஒரு நூல் கூறியதை அடுத்த நூற்றாண்டில் வரும் நூல் இன்னும் அழகாகக் கூறிவிடுகிறதோ அந்த நூலை இலக்கியம் என்று கூறமுடியாது. மேலும் அவர், -'உணர்ச்சியைத் தூண்டும் அளவைப் பொறுத்தே ஒரு நூல் நிலைபேற்றை அடைகிறது. அதற்கேற்ற அளவில்தான் இலக்கியம் என்ற பெயரையும் பெறுகிறது" என்கிறார். - . நிலைபேற்றின் காரணம் உயிரினங்களில் நிலை பே ற் றுக் கு ரிய பண்பாடுகளாக எவை உள்ளன என்று காண்பது இன்றியமையாததாகிறது. காலதேச வர்த்தமானங்கட்கேற்ப மாறுபட்டு உதவக்கூடிய கதழுவல் இயல்பே நிலைபேற்றுக்கு மூலகாரணம். இனி, இலக் கியங்களிலும் இத்தகைய இயல்பு உண்டோ என்று காண்டல் வேண்டும். ஒரு வகையில் நோக்குமிடத்துக், காலத்தை வென்று நிலைத்தை நூல்களிடம் இவ்வியல்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், உயிர்களிடம் காணப்பெறும் இவ்வியல் புக்கும், நூல்களில் காணும் இவ் வி யல் புக் கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு. புதிதாக ஓர் இலக்கியம் ஒரு காலத்துத் தோன்றுவதாக வைத்துக்கொள்வோம். எந்தக் காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/86&oldid=751304" இலிருந்து மீள்விக்கப்பட்டது