பக்கம்:இலக்கியக் கலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் இலக்கியம் - 73. இதன் காரணத்தை ஆயும்பொழுது முன்னர்க் கூறியி உயிர் நூல் தத்துவம் சிறிது மாறுபடுகிறது. அத் தத்துவத்தின்படி உயிர்கள் தழுவல் இயல்பு பெற்றதால் நிலைபெறுகின்றன என்று கூறினோம். பட்டினப்பாலையின் நிலைபேற்றுக்குக் காரணம்' இவ்வியல்பன்று. உருத்திரங்கண்ணனர்ர் கண்ட பட்டினமே.நூலில் கூறப்பெற்றிருப்பினும், கூறும் முறையில் அது என்றும் நிலைபெறத் தக்க சிறப்பை அடைகிறது. உருத்திரங் கண்ணனார் தமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பின்னர் வாழப்போகும் மக்கள் என்ற இரு சாராரையும் பிடித்து ஆட்டும் இயல்பு உணர்ச்சி, பண்பு. போராட்டம், மகிழ்ச்சி, துன்பம் என்ற பொதுத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டும் கவிதையை ஆக்கியிருக்கிறார். ஆகலின், அது இன்றும் நிலைக்கிறது. நாளையும் நிற்கும். மக்களினம் எவ்வளவு வளர்ந்தாலும், மாறினாலும் இவ்வடிப்படைத் தன்மைகள் மாறப்போவதில்லை. மக்கள் மாக்களாக மாறு கிறவரை இவ்விலக்கியம் சுவையுடையதாகவே இருக்கும். காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த கலைஞர்களைப் பற்றியே உருத்திரங் கண்ணனார் பாடினும், மேற்கூறிய பொதுத் தன்மை காரணமாக நாம் இன்றும் அதனை அனுபவிக்க இயலுகிறது. காலதேவன் மக்கள் இனத்தையே அழித்தால் ஒழிய, இப் பொதுத்தன்மையை அழிக்க இயலாது; எனவே இத்தன்மையாகிய அடிவாரத்தில் முகிழ்த்த இலக்கியங்களையும் ஒன்றும் செய்ய முடியாது. வாழும் இலக்கியத்தைச் செம்மை இலக்கியம் (Classic) எனப் போற்றுவது அக்காலமரபு. அனைத்து உலகப் பொதுமைப் பண்பு, கவர்ச்சிமிகு சிறப்பியல்புகள், புத்தாக்கம் புதுமைப் பொலிவு, காலத்தை வென்று நிற்றல் எனும் பண்புகளே. இதுவரை கூறியவற்றிலிருந்து ஒரு நூல் சிறந்த இலக்கியமா என்று காண்பதற்குக் காலமே சிறந்த கருவிபோலும் என்று நினைக்கத் தோன்றும். இது ஒரளவு உண்மைதான். நம் காலத்தில் தோன்றிய ஒர் இலக்கியத்தை விருப்பு, வெறுப்பு நீக்கி ஆய்தல் கடினம். இத்தகைய இக்கட்டான நிலையில், நவீன இலக்கியங் களைக் கற்பவர் ஒவ்வொருவரும் அவரவர் திறனாய்வுச் சத்தியையே பயன்படுத்தல் வேண்டும். இந்நாள் தோன்றின எவையும் பழைமைபற்றிச் சிறந்தவை என்றும், அந்நாள் தோன்றிய எவையும் புதுமைபற்றிச் சிறப்பில்லன என்றுங் கூறுதல் தவறு." நிலைத்துவிட்ட காரணமே சிறப்புக்கு அறிகுறி என்றால் 'பழமொழி', ஆசாரக்கோவை போன்ற நூல்களும் இலக்கியம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/91&oldid=751310" இலிருந்து மீள்விக்கப்பட்டது