பக்கம்:இலக்கியக் கலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இலக்கியக் கண்)ெ நுண் கலைகளையே இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, கண்ணாகிய பொறி வழி அநுபவிக்கப்படுவது. ஏனையது செவியாகிய பொறிவழி அநுபவிக்கப்படுவது. 'இசையும் கவிதையும் இரண்டாவது கூறிய முறையில் அநுபவிக்கப்படுபவை. கேட்டிடத்திலும் சிற்பத்திலும் கனம் உடைய பருப் பொருள்கள் பயன்படுவதாலும் "மூன்று அளவைகளால் ஆயதாலும் இவை மற்றவற்றை நோக்கத் தாழ்ந்தவை. விருப்பம் காரணமாகச் செய்யப்படுபவை எல்லாம் நுண் கலைகள் அல்லவாயினும், நுண்கலைகளும் விருப்பம் காரணமாகச் செய்யப்படும். இங்ஙனம் செய்யப்படும் செயல்கள் மிகுந்த பயனை அளிப்பதும் உண்டு. ஆனால், அவை எவ்வளவுக்கு எவ்வளவு பயன் கருதாமல் செய்யப்படுகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறந்த நுண் கலைகளாகத் திகழும். இக்கலைகளைக் கூறுமிடத்து, ஆக்கப்பட்டவை என்று கூறலே பொருத்தமுடையது. நுண்கலைகளுள் வேறுபாடு. இந் நுண்கலைகள் ஆக்கப்படும் முறையில் ஓர் அளவு வரை, முற்கூட்டிய ஆராய்ச்சியும், வன்மையும் ஒழுங்குமுறையும் தேவை. இந்த அளவுவரை அவை ஏட்டில் எழுதப்படும் சட்டதிட்டங் களாகும். இதன் பின்னர்க் கலைஞனுக்குப் பூரண சுதந்தரம் கிடைக்கிறது. அவனது கற்பனையின் திறத்திற்கு ஏற்பக் கலை உயர்வடைகிறது. உதாரணமாக இராகத்தின் ஆரோகண அவரோகண சுரங்கள் எழுதிக்கூடக் காட்டப்படலாம். அந்த இராகத்தின் சஞ்சார எல்லை, மூர்ச்சனை முதலியவையும் சட்டதிட்டங்களாக வகுக்கப்படலாம். ஆனால், இவ்வளவில் இசைக்கலை நிற்பதானால் ஒருவரைச் சிறந்த இசைவல்லுநர் என்று கூற வேண்டா. அனைவருமே இசைக்கலைவாணர்களாக ஆகிவிடலாம். ஆனால், இந்த எல்லைகளுள் நின்று கலைஞன் தன் கற்பனையைப் பயன்படுத்துகிறான். கற்பனையின் விரிவிற்கு ஏற்பக் கலை பரிமளிக்கிறது. வடிவும் உள்ளிடும் ஆராய்ச்சி செய்வதன் நிமித்தம் இத் நுண்கலைகள் 'வுடிவு 'உள்ளீடு என்று பிரித்துக்கொள்ளலாம். இப் பகுப்பு நலஞ் செய்வதுபோல் தோன்றினாலும் அதிகமாக இதனைப் பயன் படுத்தல் இயலாது. ஒவியம் சிற்பம் என்ற இரண்டிலும் இங்ஙனம் பிசித்துக் காணலாம். ஒவிய அளவில் கூறப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/98&oldid=751317" இலிருந்து மீள்விக்கப்பட்டது