பக்கம்:இலக்கியக் கலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை 81 'வுண்ணக்கூட்டல் அளவு தவறாமல் வண்ணங்களைக் குழைத்து ஒரு சித்திரம் வரையப்படலாம். வரையப்பட்ட பொருளின் அளவு, பரிமாணம் முதலியவை ஒழுங்குபட அமைந்திருக்கலாம். என்றாலும் என்ன? அச்சித்திரம் உயிரற்றதாகவே இருந்து விடலாம். நிறக்கூட்டலும், அளவு முதலியனவும் அக்கலையின் புறப்பகுதியாகும். இப்பகுதி நன்கு அமைந்துவிட்டால் மட்டும் கலை முற்றுப்பெற்று விடாது. கலையின் அகப்பகுதி ஒன்று உண்டன்றோ? உணர்ச்சி ஊட்டுவதே அகப்பகுதியாகும். அஃதின்றேல் பயனில்லை. ஆனால், இவ்வேற்றுமை இசை, கவிதை என்ற இரண்டிடத்தும் செல்லாது. இசையில் புறப்பகுதியும் அகப்பகுதியும் பிரிக்க முடியாது அமைந்து கிடக்கின்றன. பொருட்கருக்கமும் பரிமாணமும் கட்டிடக்கலை இப்பகுப்பில் முதற்படியில் அமைந்து கிடக்கும் ஒன்று. முக்கூட்டுப் பரிமாணத்திற்குக் கட்டுப்பட்டு இயற்றப் படுவது இது. மேலும் வசித்தல் முதலிய பயன் கருதிச் செய்யப் படுவதால், பயன்படுத்தப்படும் பொருள்களில் பொருட்சுருக்கம்: ஏற்படுகிறது. கலைஞன் இச் சுருக்கத்தை அடிப்படையில் நினைப்பதாலும் சுதந்திரம் இழந்துவிடுவதாலும் ❖ናöö}ö} மட்டமானதாக ஆகிவிடுகிறது குறிக்கோள் தன்மை சிற்பமும் இத்தன்மையை உடையதே. ஆனால், ஈண்டுப் பொருட்சுருக்கம் என்பதில்லை. பயன் கருதிச் செய்யப்படும் இயல்பும் ஈண்டில்லை. பெரும்பாலும் சிற்பம் மனித உருவத்தையே கொண்டு செய்யப்படுவதாகலின் மனித மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் குறிக்கோள் தன்மையை வெளியிடப் பயன்படுகிறது. - * இவற்றினும் வேறுபட்டதாகிய ஓவியக்கலை இரு கூட்டுப் பரிமாணம் உடையது. பயன்படுத்தப்படும் பொருளில் கருக்கம் இன்மையின் கலைஞனுக்கு அதிகச் சுதந்திரம் இருக்கிறது. ஏனைய இரண்டைக் காட்டிலும் மென்மையும் மேன்மையும் இக்கலையில் திகழ்கின்றன. இக்கலையை அநுபவிக்கப் புகும் முறை முற்கூறிய முறையாகும். வெறும் பொறியளவில் நின்று ஒவியத்தைக் கண்டால் பல் நிறக்கலவை' என்று கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் ஆண்டுக் காண இயலாது. ஆனால், அவ்வோவியம் தாங்கி நிற்கும் உணர்ச்சி நம்மால் பகிர்ந்து கொள்ளப்படும் பொழுது ஒவியம் தோன்றிய பயனை 6 سد يَ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/99&oldid=751318" இலிருந்து மீள்விக்கப்பட்டது