பக்கம்:இலக்கியக் கேணி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் கட்டை ஏறல் 101

கூறும் பழிமொழியை மாதவிக்குச் சொல்லி வருமாறு அனுப்பினுள். அங்ங்ணம் கூறிய வயந்த மாலையை நோக்கி மாதவி காதலனை இழந்தோர் நிலையைக் கூறுவா

ளாய்,

' காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்

போதல் செய்யா உயிரொடு நின்றேன் காதலர் இறப்பின் கனையெரி பெர்த்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா(து) இன்னுயிர் ஈவர்; ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்; நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு) உடன் உயிர் வாழ்க்கைக்கு நோற்(று) உடம்(பு)

அடுவர் :

என்று மூன்று நிலைகளைக் கூறினுள். இம்மூன்றனுள் உடன் உயிர்நீத்தல் பாண்டியன் நெடுஞ்செழியனது கோப்பெருங்தேவி மாட்டும், இரண்டாவதாகிய தீப்பாய் தல் பூதப் பாண்டியன் தேவியிடத்தும் கண்டனவாகும். பின்னதாகிய கைம்மை நோன்பு நோற்றல் எண்ணிறந்த உலகோர் மாட்டுக் காணப்படுவதாகும்.

நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுதல்

கணவன் இறப்பின் விதவையிடும்பையை ' வெறுக்கும் மகளிர் கணவனோடு உடன் கட்டை ஏறு தல் ஒர் ஒழுகலாறு. இவ்வொழுக்கத்தை ' சதி ' என் றும், சக கமனம்' என்றும் கூறுவர். இங்ங்னம் கண வன் இறக்க உடனுயிர் நீத்தவரை மாசத்தி அதாவது தெய்வம் என்று கொண்டு அவர் பொருட்டுக் கல் நாட்டி யும், பிறவாறும் வணங்கி வழிபட்டனர். இக் கல்,