பக்கம்:இலக்கியக் கேணி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் கட்டை ஏறல் 105.

வழங்குவான். காலன் என்னும் கண்ணிலியுவப்ப இவ னும் மேலோர் உலகம் எய்தினன். இவனுடைய உரிமை மனைவியர்களும் உடன் மாய்ந்தனர். இதனைக் குட்டு வன் கீரனர் புறம் 240இற் பாடியுள்ளார்.

ஆதிரைகாதை

ஆதிரை என்பாள் சாதுவன் என்னும் ஒரு வணிக அக்கு மனைவி; ஒப்புயர்வில்லாக் கற்புடையவள். ஒரு கால், சாதுவன் பொருள் தேட எண்ணிச் சில வணிக ரோடு கப்பலேறிச் சென்ருன். கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் பாய்மரத் துண்டமொன்றைப் பற்றி நீந்தி நாகர் மலேப்பக்கத்தேயடைந்து பிழைத்தான். கடலே ந்ேதிப் பிழைத்துக் காவிரிப்பூம்பட்டினம் வந்தோர் “ சாதுவன் இறந்தான் ” என்று ஆதிரைக்குக் கூறினர். அவள் இறக்கத் துணிந்து, மயானத்திற் குழிதோண்டி, அதில் விறகுகளே அடுக்குவித்துத் தீயை மூட்டி, என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன்' என்று சொல்லித் தீப்பாய்ந்தாள். அவள் கற்பின் திறத் தால் அவளைத் தீச்சுடாதொழிந்தது; அவள் ஆடையும் நெருப்புப் பற்றவில்லை; கூந்தலிற் குடிய மாலையும் தொன்னிறம் நீங்கிற்றிலது, தாமரையில் வீற்றிருந்த திரு மகள் போலப் பொலிவுறத் தோன்றினுள்.

உடுத்த கூறையும் ஒள்ளெரி யுருஅ(து); ஆடிய சாந்தமும் அகைந்த கூந்தலிற் சூடிய மாலையும் தொன்னிறம் வழாது; விரைமலர்த் தாமரை ஒருதனி யிருந்த திருவின் செய்யோள் போன்றினி(து) இருந்தனள் : என்பர் மணிமேகலை யாசிரியர்.