பக்கம்:இலக்கியக் கேணி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இலக்கியக்கேணி

மாதினியார்-திலகவதியார்

திருவாமூரில் வாழ்ந்தவர்கள் புகழனரும் மாதினியா ரும். இவ்விருவரும் பயந்த மாணிக்கங்களே திருநாவுக் கரசரும் திலகவதியெனும் மங்கை நல்லாளும். திலக வ்தியாருக்கு மணப்பருவம் வந்துற்றது. கலிப்பகையார் என்னும் வீரர்பெருந்தகைக்குத் திலகவதியாரை மணம் பேசி முடித்தனர் பெற்றேர். அவ்வமயம் வேந்தர்க் குற்றுழியுதவக் கலிப்பகையார் போர் மேற் செல்ல வேண்டியதாயிற்று. சின்னுள் கழிந்தன. புகழஞர் நோய்வாய்ப்பட்டிறந்து விண்ணுலகடைந்தார். மாதினி யார் சுற்றமுடன் மக்களையும் துகளாகவே நீத்துப் பிரியாத உலகெய்தும் கற்புநெறி வழுவாமற் கணவனுரு டன் சென்ருர். அதாவது தீப்பாய்ந்து உயிர் நீத்தார். இங்ங்ணமாக, வெந்த புண்ணில் வேல் நுழைந்தாற். போலக் கலிப்பகையார் போரில் உயிர் துறந்தார்' என்ற செய்தி திலகவதியாருக்கும் அவர் தம்பியார்க்கும் எட்டியது. எங்தையும் எம் அன்னையும் என்ன அவர்க்குக் கொடுக்க இசைந்தார்கள்; ஆகையால் நான் அவர்க்கே உரியேன்; எனவே இந்த உயிரை அவருயி ரோடு சேர்ப்பிப்பேன்' என்று திலகவதியார் இறக்கத் துணிந்தார். பின்னர்த் தம்பியார் உளர் ஆக வேண்டும் எனும் தயாவினுல் இம்பர் மனைத்தவம் புரிந்து, அனைத் துயிர்க்கும் அருள் தாங்கித் திலகவதியார் உயிருடன் இருந்தார். இவ்விருவர் செய்திகளால் 7ஆம் நூற் ருண்டில் எரிபுகுதலாகிய ஒழுகலாறு இந்நாட்டில் நிலவி யிருந்தமை தெளிவு.