பக்கம்:இலக்கியக் கேணி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இலக்கியக்கேணி

திருக்கழுக்குன்றத்தில்

இரண்டாங் குலோத்துங்க சோழனுடைய 6 ஆம் ஆண்டுக் கல்லெழுத்துத் திருக்கழுக்குன்றத்தில் உள்ளது. எதிரிலி சோழச் சம்புவராயனுடைய சேபைதிகளுள் ஒருவன் இன்னெரு சேனுபதியைக் கொன்று விட்டான்: இறந்தவனுடைய மனைவி உடன்கட்டை ஏறினுள் இவ் விருவருடைய நன்மையின் பொருட்டு விளக்குகள் இரண்டு எரிக்க 90 ஆடுகளும் 31 பசுக்களுந் தானமாக

அளிக்கப்பட்டன.

தேவப்பெருமாள்

தென்னர்க்காடு மாவட்டம் எல்வாசூைரில் உள்ள வீரராசேந்திர சோழனது கல்லெழுத்து ஓர் உருக்கமான செய்தியைச் சொல்லுகிறது. இராசராச மலயகுலராயன் ஆன நீரேற்ற பெருமாள் ஆன எதிரிகள் நாயன் என்ற சிற்றரசனுடைய மனைவி தேவப் பெருமாள் என்ற பெயருடையவள். அவள் அச் சி. ற் ற ர ச னுடைய வேலைக்காரி ' எனப்பெற்ருள். அவன் இறந்ததும் அவள் உடன்கட்டை ஏறினுள்; கணவன் இறந்த பிறகு உயிருடன் இருந்தால் தன்னுடைய சக்களத்திகளுக்கு அடிமையாக உழைக்க நேரிடும் என்று கருதினுள்; தன் னைத் தீப்பாய வேண்டாம் என்று தடுப்பவன் தன் மனை வியைப் பிறர்க்களிக்கும் பாவத்திற்படுவான் என்று சாப மிட்டாள்; தன்னைக் கட்டித் தீயிற் போடாதவர்களையும் அங்ங்னமே சபித்தாள். இச்செய்தி வியப்பாகவும் உருக்க மாகவும் இருக்கிறது.