பக்கம்:இலக்கியக் கேணி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் கட்டை ஏறல் 111

கோட்டம் கட்டுதல்

கணவன் இறந்ததும் ஒருங்குடன் மாய்ந்த பெண் டிர் புதைக்கப்பட்ட இடத்திற் கோட்டம் கட்டும் வழக் கம் பண்டைக்காலத்தில் இருந்தது. இன்னர் இன்ன இடத்திலே புதைக்கப் பட்டுளார் என்பதையும் அக் கோட்டங்கள் அறிவித்தன. இச்செய்தியைப் பின்வரும் மணிமேகலையடிகள் அறிவிக்கும்:

அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணத்துப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலக் கோட்டம்.'

முடிப்புரை

இதுகாறுங் கூறியவாற்ருன், உடன்கட்டை யேறு தல் பண்டு சிறுபான்மையேனும் இருந்தது என்றும், உடன்கட்டை போதல் பெருமையாகவுங் கருதப்பட்டு வந்தது என்றும் உடன்கட்டை யேறினேரைக் கோயில் கட்டியும் வண தினர் என்றுமறிகிருேம். இவ்வழக்கு இற்றை ஞான்று இல்லை; சட்டத்தாலுந் தடை செய்யப் பட்டுளது.