பக்கம்:இலக்கியக் கேணி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. போர்வைக் கோப்பெருநற்கிளளி

உறையூர்

உறையூர், சங்க காலச் சோழரது உள்நாட்டுத் தலே நகராய் இலங்கியது: உறந்தை யென்றும் கூறப்பெற் றது; பண்டு இங்கு ஒரு கோழி யானையொடு பொருது வென்றமையால், கோழி என்றும் பெயர் பெற்றது. முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய புறஞ்சிறை வாரணம் ' என்பது சிலப்பதிகாரம். இவ்வரிகளுக்குப் பழைய வுரையாசிரியர், யானையைச் சயித்த கோழி தோன்றினவிடம் வலியுடைத்தென்று கருதி அவ்விடத்து அதன் பெயராலே சோழன் ஊர் காண்கின்றபொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனலே புறம்பே சிறை யையுடைய கோழியென்ருயிற்று ' என்று விளக்கவுரை எழுதியுள்ளார். இவ்வுறந்தையை இளங்கோவடிகள், : பீடாருறங்தை என்று புகழ்வர்; வெண்ணெல் வேலியுறங்தை (852), செல்லா கல்லிசை யுறங்தை ' (395) என்று புறமும், கொச்சி வேலித் தித்தனுறங்தை (222) என்று அகமும் புகழும். சோழன் உறந்தைக் கரும்பு இனிது ' என்பது பொய்கையார் வாக்கு. உறையூரவையில் அறம் கின்று கிலேபெற்றதென்று கூறுவர்: மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறம் கின்று கிலேயிற்று ’ (புறம் - 89), மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறங்கெட வறியா தாங்கு (நற்றிணை - 400), ‘ ஆரங் கண்ணி அடுபோர்ச்