பக்கம்:இலக்கியக் கேணி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்வைக் கோப்பெருநற்கிள்ளி 115

வருதார் தாங்கிப் பின்ைெதுங் கின்றே; நல்கினும் நல்கா னுயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதில் அம்ம ! பசித்துப் பணைமுயலும் யானே போல இருதலை ஒசிய எற்றிக் களம்புகு மல்லன் கடந்தடு நிலையே. -புறம், 80

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போர்

ஏழைப் பாட்டாளி: காலை முதல் மாலை வரை இடையரு துழைப்பவன்; அவனுாரில் திருவிழா வொன்று தொடங்க விருந்தது; அதற்கு அவன் ஊழியஞ் செய்யப் போகவேண்டும். அவன் மனைவி பிள்ளை பெறுதலைப் பொருந்தினுள்: வீட்டில் அவளுக்கு உதவ யாருமில்லை; அவனே அவளுக்கு உதவவேண்டியிருந்தது. மழையோ பெய்யத் தொடங்கியது. மகப்பேறுற்ற மனைவி இருக்கக் கட்டில் வேண்டும்; கட்டிலோ பழு துற்றிருந்தது; பழுதுற்ற பகுதியைப் பிணிக்க வேண்டும்; மாலேக் காலமும் நெருங்கியது: கட்டிலேப் பிணிக்கலுற் ருன்; விரைவாக முடிக்கவேண்டும். அவன் கையகத்த த்ாகிய ஊசியை எவ்வளவு விரைவாகச் செலுத்தியிருப் பான் ? சொல்லவேண்டியதே யில்லை. இக் காட்கியை முன்னொரு நாள் சாத்தந்தையார் கூர்ந்து நோக்கியவர்: பெருநற்கிள்ளி ஊர்கொள வந்த பொருங்னெடு பொரும் போரைக் கண்டதும் இதுவே அவர் அகக்கண்முன் கின்றது. உடனே முகிழ்த்தது பின்வரும் பாட்டு :

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணிற் றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நிணக்கும் இழிசினன் கையது