பக்கம்:இலக்கியக் கேணி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. சமய இலக்கியம்’

தமிழ் மிகத் தொன்மை வாய்ந்த மொழி: வட வேங்கடம் தென் குமரிக்கு இடைப்பட்ட பெருகிலப் பரப்பில் பேசப்பெற்ற மொழி - பேசப் பெறும் மொழி; இம்மொழி, இலக்கிய வளம் பொருந்தியது; இலக்கண வரம்புடையது; சமய சாத்திர நூல்கள் பெருவாரியாகக் கொண்டு மிளிர்வது.

தமிழர் எஞ்ஞான்றும் சிறந்த தெய்வ நம்பிக்கை யுடையவர். தமிழில் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இதில் தமிழ் நாட்டு மக்களுக் குரிய தெய்வங்கள் கூறப்பெற்றுள்ளன. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை; இங்குத் தெய்வம் திருமால். மலேயும் மலேசார்ந்த இடமும் குறிஞ்சி; இங்குத் தெய்வம் முருகன். இங்ங்னம் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ் வொரு தெய்வம் கூறப்பெற்றுள்ளது.

தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பெற்ற நூல் திருக்குறள். திருவள்ளுவர் தனிப்பட்ட எந்தச் சமயக் கருத்தையும் கூறவில்லை; எனினும் திருக்குறள் சமய அறிவு உள்ளவர்களுக்கு நல் விருந்தாக இருக்கிறது. திருக்குறள் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. முதற் குறள், உலகம் ஆதிபகவானகிய முதலையுடையது என் கின்றது; கடவுளை எண்குணத்தான் என்கின்றது இன்

  • தமிழ் வளர்ந்த கதை என்ற பேச்சு வரிசையில் திருச்சி வானுெலியில் பேசிய பேச்சைத் தழுவி எழுதியது.