பக்கம்:இலக்கியக் கேணி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய, இலக்கியம் 121

ைெரு குறள்: இறைவனடியை வணங்கியவர் பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம் என்கின்றது பிறிதொரு குறள்: கற்றதனலாய பயன், இறைவனது நற்ருளைத் தொழுதலே யாகும் என்பது இன்னும் ஒரு குறள். திருமகளும், திருமாலும், இந்திரனும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளனர்.

இனிச் சங்க இலக்கியங்களை நோக்குவாம். சங்க காலத்து நூல்கள் சமயத்தைப் பற்றி நிறையக் கூற வில்லை. எனினும் சங்க காலத்துப் புலவர்கள் தெய்வ நம்பிக்கையில் சிறிதும் குறைந்தவரல்லர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவர் ஒரு பாண்டிய அரசர். இவர் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்குமுன் இருந்தவர். இவரைக் காரிகிழார் என்ற ஒரு புலவர் பாடியுள்ளார். அரசனே முக்கட் செல்வன் நகர் வலம் செயற்கு நின்குடை தாழ்க என்று பாடியுள்ளார். அதாவது சிவன் கோயிலை வலம் வரும்பொழுது குடை யைத் தாழ்த்துக என்பது கருத்து. முக்கட் செல்வன் என்றது சிவபெருமானை; நகர் என்றது கோயிலே.

ஒளவையார் என்ற புலவரை அறியாதவர் இரார். அவர்காலத்தில் இருந்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர். ஒருநாள் அதியமானுக்கு ஒரு நெல்லிக் கனி கிடைத்தது. இக்கனியை உண்பவர் நெடு நாள் உயிர்வாழ்வார்களாம். இக் கனியை ஒளவையார் உண் பது நல்லது என்று அதியமான் நினைத்தான்: ஒளவையா ரிடம் கொடுத்தான். ஒளவையார் கனியை உண்ட பின்னரே கனியின் சிறப்பை அறிந்தார். அதியமான நோக்கி வள்ளலே, பிறைநுதல் பொலிந்த சென்னி லே