பக்கம்:இலக்கியக் கேணி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இலக்கியக் கேணி

மணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே என்று வாழ்த்தினர். பிறைச் சந்திரனைச் குடியவனும் நீலகண்ட முடையவனுமான சிவபெருமானைப் போல நிலைபெற்று வாழ்வாயாக என்பதே அவ்வாழ்த்து.

இதுகாறும் கூறிய இரண்டு செய்திகளால் நாம் அறிவ தென்ன ? சங்ககால மக்கள் தெய்வ நம்பிக்கை யுடையராய் இருந்தனர் என்பதே. தக்க இடங்களில் சமயக் கருத்துக்களை அமைத்துப் பாடினர் என்றும்

நாம் அறிகிருேம்.

இச்சங்க காலத்து வாழ்ந்தவனே சேரன் செங்குட்டு வன். அவன் கண்ணகிக்குக் கல் கொணர்வதற்காகப் புறப்பட்டான். அப்பொழுது சிவன் கோயில் பிரசாதம் கொண்டுவந்து கொடுத்தனர். அதனைச் செங்குட்டுவன் தலையில் தரித்துக்கொண்டான். பிறகு திருமால் கோயிலி லிருந்து பிரசாதம் வந்தது. அதனையும் ஏற்றுத் தோளில் தரித்துக்கொண்டான். இதனைச் சிலப்பதிகாரம் சொல்லு கிறது. இதிலிருந்து சங்ககால மக்கள் சமய ஒழுக்கம் உடையராய் இருந்தனர் என்று அறிகிருேம். இச்சேர அரசன் காலத்தில் தமிழகத்தில் சைவம் வைணவம் பெளத்தம் சமணம் என்னும் நான்கு பெருஞ் சமயங்கள் இருந்தன.

இச் செங்குட்டுவன் தம்பி இளங்கோவடிகள். இவர் ஒரு சமணத் துறவி. இவர் எழுதிய நூலே சிலப்பதிகாரம். இது சமண சமயக் கருத்துக்களே அழகுற அறிவிக்கும் அரிய காப்பியம். இது கோவலன் கண்ணகி கதையைக் கூறுவது.