பக்கம்:இலக்கியக் கேணி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய இலக்கியம் | 12?

பெளத்தரும் செல்வாக்கு இழந்திருந்தனர். எனினும் சமணரும் பெளத்தரும் தமிழன்னைக்குப் பல அணிகளைச் குட்டியுள்ளார்கள்.

சிலப்பதிகாரம் ஒரு சமண இலக்கியம் என்று முன்பே கூறப்பட்டது. அதனோடு ஒத்து எண்ணப் பெறும் சமண காவியங்களில் சிறந்தது சீவக சிந்தாமணி, சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர். இது சீவகன் என்னும் ஒருவனது கதையை இயம்புவது; மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களையுடையது.

பெருங்கதை என்பது இன்னொரு சமண நூல். இதில் உதயணன் என்னும் ஒரு அரசனது கதை கூறப் பெற்றுள்ளது. மேருமந்தர புராணம், யசோதர காவி யம், நாககுமார காவியம், நீலகேசி என்பனவும் சமணர் காவியங்களாம்.

மணிமேகலை என்பது பெளத்த சமய இலக்கியம் என்று மேலே கூறினேன். இடைக் காலத்தில் பல பெளத்த காவியங்கள் எழுந்தன. குண்டலகேசி வளையாபதி என்னும் நூல்கள் முழுவதும் இப்பொழுது கிடைக்கவில்லை; சில பகுதிகளே கிடைத்துள்ளன.

12 ஆம் நூற்ருண்டிற்குப் பிறகு சைவசமய சாத்திரங்கள் தோன்றின. இவற்றுள் தலைசிறந்த நூல் சிவஞானபோதம். இதனை இயற்றியவர் மெய்கண்ட தேவர். இவர் நூலில் கண்ட பொருளை விரித்து எழுதப் பெற்றநூல் சிவஞ்ான சித்தியார் எனப்பெறும். சிவஞான சித்தியாரை எழுதியவர் அருள் நந்தி சிவாசாரியர். சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினன்கு. - - o