பக்கம்:இலக்கியக் கேணி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இலக்கியக் கேணி அண்மைக்காலத்தில் தமிழ் நாட்டில் முகம்மதிய மதமும் கிறிஸ்தவ மதமும் பரவின. தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழறிந்தவர்களே முகமதியர்கள் ஆனர்கள். ஆதலின் தமிழிலே முகமதிய மதத்தைக் குறித்து நூல்கள் பல எழுதினர்கள். சவ்விாதுப் புலவர் என்பவர் 17ஆம் நூற்ருண்டில் வாழ்ந்தவர். இவர் முகையதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் என்ற நூலைப் பாடினர். உமறுப் புலவர் என்பவர் இன்னெரு சிறந்த முகமதியப் புலவர். இவர் சீருப் புராணம் என்னும் ஒரு காவி யத்தை இயற்றினர்; இது 12 ஆயிரம் செய்யுட்களை யுடையது. தமிழ் நாட்டுக்கு வந்த மேலை நாட்டுக் கிறிஸ்தவர் தமிழை நன்கு கற்ருர்கள் , தம் சமயத்தைப் பரப்புவ, தற்காக நல்ல தமிழறிவைப் பெற்ருர்கள்: தமிழில் கிறிஸ் தவ சமய நூல்களும் இயற்றினர்கள். மேலைநாட்டுக் கிறிஸ்தவத் தமிழ்ப் புலவர்களுள் சிறந்தவர் வீரமாமுனி வர். இயேசுவின் வாழ்க்கையைக் கூறும் தேம்பாவணி என்னும் காவியத்தை 1724 இல் இயற்றினர். தமிழ். நாட்டில் பிறந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவித் தமிழுக் குச் சிறந்த சேவை செய்தவர்கள் பலர் உண்டு. ஒருவர் H. A. கிருஷ்ணப்பிள்ளை என்ற பெயருடையவர். இவர் 19 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்தவர். இவர் யாத்த இலக்கி யங்களுள் சிறந்தது இரrணிய யாத்திரிகம் என்பது. ஒவ்வொரு சமயத்தவரும் பாடிய சிறு பிரபந்தங்கள் பலஉள. ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் எழுதித் தமிழன்னைக்கு அணிகலன்கள் பல குட்டி வாழ்ந்தவர் பலர். வாழிய பலசமயப் புலவர்களும் !! வளர்க அவர் தம் இலக்கியத் தொண்டு!! -تقير