பக்கம்:இலக்கியக் கேணி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இலக்கியக்கேணி

ஏழுமஞ்சாடி உட்பட உருத்திராக்ஷம் ஒன்று நிறை அரைக்கழஞ்சே நாலு மஞ்சாடியும் குன்றிக்கு வில காசு ஒன்று. -

படிமத்தைப்பற்றிய குறிப்பு

இது செப்புப் படிமம்: இருபது விரல் உயரம் : இரண்டு கையுடையது ; கனமாகச் செய்தது : கின்ற கோலமுடையது. இப்படிமம் கின்ற பீடம் பத்துவிரல் நீளம், எண்விரலகலம், எண்விரலுயரமுடையது : பத்ம (தாமரை) வடிவமுடையது. இப்படிமத்துக்கு உருத்தி ராக்கமாலை யளிக்கப்பெற்றது. அம்மாலே கட்டின பொன் ஏழுமஞ்சாடியும் சேர்த்து மொத்த எடை அரைக்கழஞ்சு நாலுமஞ்சாடி, ஒரு குன்றி. அதன் வில காசு ஒன்று. ==

அந்தநாளும் வந்திடாதோ !

இங்ங்ணம் பலவழிகளில் சோழர் காலத்து அரசியல் அலுவலர் பலர் சைவம் தழைக்கச் செய்தனர். திருக் கோயில்களைப் பராமரித்தும், திருக்கோயில்களுக்கு நிபந்தங்கள் வழங்கியும், நாயன்மார்களின் திருமேனிகளை எழுந்தருளுவித்துப் போற்றியும், சைவ நூல்களைக் கசடறக்கற்று அதற்குத்தக நின்றும் சைவத்தைப் பரப்பினர். பொய்கை நாடு கிழவன் திருத்தொண்டர் திருவந்தாதியை நன்கு அறிந்தவர் ; ஆகலின் அன்ருே மெய்ப்பொருள் நாயனரின் பெயரைக் குறிக்காது - தத்தா நமரே காண் என்ற மிலாடுடையார்” என்று குறிக்கச் செய்தார்! இங்ங்னம் சமய நூல் அறிவும், சமயப்பற்றும் தழைத்தோங்கிய அந்த நாளும் வந்தி டாதோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/15&oldid=676710" இலிருந்து மீள்விக்கப்பட்டது