பக்கம்:இலக்கியக் கேணி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அந்தாதியில் சுந்தரர்

தோற்றுவாய்

அந்தாதி என்று இத்தலைப்பிற் குறித்தது திருத் தொண்டர் திருவந்தாதி ஆகும். இத்திருவந்தாதி திரு நாரையூர் நம்பியாண்டார் நம்பியால் அருளப்பெற்றது : திரு என்ற அடையொடு சேர்த்த அந்தாதிப் பெயரால் அமைந்திருப்பதே இதன் பெருமையை விளக்கும். இத் திருவந்தாதி செப்பத்தகும் என்று தொடங்கிச் செப்பிடவே என்று முடிந்து மண்டலித்து அந்தாதித் தொடையான் அமைந்தது; திருத்தொண்டத் தொகை யில் 11 பாடல்களில் அருளப்பெற்ற தொகையடியார் 9 பேர், தனியடியார் 63 பேர்* ஆக 72 திருத்தொண்டர் களுக்குத் தனித்தனி: ஒரு பாடல் வீதம் (சில தொண்டர் களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களோடு) 89 பாடல்களையுடையது : திருத்தொண்டத் தொகைப் பாடல் ஒவ்வொன்றினிற்றிலும் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே என்றுள்ள வரிக்கு ஏற்பச் சுந்தரர் வரலாற்றைக் குறிக்கும் பாடல்கள் இடையிடையே வந்துள்ளன. இங்ங்ணம் அமைந்தவை 8, 23, 82, 40, 48, 57, 63, 89, 77, 86, 87 என்ற எண்ணுள்ள பதி னொரு பாடல்களாம். இவற்றினின்றும், 18, 27, 35.

  • சுந்தரரையும் சேர்த்து 63 என்க. கூட்டம் ஒன்பா ளுேடு அறுபத்து மூன்று தனிப்பெயரா ஈட்டும் பெருந்தவத் தோர் என்பது திருத்தொண்டர் திருவந்தாதி 87-ம் பாட்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/16&oldid=676711" இலிருந்து மீள்விக்கப்பட்டது