பக்கம்:இலக்கியக் கேணி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இலக்கியக்கேணி

89. 45, 68, 76 ஆகிய எண்ணுள்ள பாடல்களினின் றும், சடையனர், இசைஞானியாரைப் பற்றிய (84, 85 ஆம்) பாடல்களினின்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றி அறியும் செய்திகளைத் தொகுத்துக் கூறுவதே இக்

கட்டுரையின் நோக்கமாம்.

ஊரும் பெற்ருேரும்

சுந்தரர் அவதரித்த ஊர் திருநாவலூர் : தங்தை சடையனர் ; தாய் இசை ஞானியார் . இவை 84, 85 ஆம் பாடல்களினின்று அறியப்பெறும். நல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற கன்னகரே என்பது 37 ஆம் செய்யுள். குவலயத்தில் நலம் விளங்க, நாம் விளங்க, நற்றவத்தின் பலம் விளங்கச் சுந்தரர் திரு அவதாரம் செய்தார் என்று 84 ஆம் செய்யுள் கூறும்.

திருப்பெயர்கள்

, நம்பியாரூரன் (8) வன்ருெண்டன் (18. 32, 35, 39, 63), நாவலர்கோன் (23), நாவலூராளி (27, 87), திருவாரூரன் (40, 48, 77), காவலர் பெருமான் (45), நாவற்குரிசில் (68), நாவலூரரசு (69), நாவலூர் மன்ன வன் (76) என்பனவாம்.

ஆவணம்காட்டி ஆட்கொண்டது

சுந்தரர் தடுத்தாட்' கொள்ளப்பெற்ற செய்தியே இவ்வந்தாதியில் முதன்முதலாகச் சுந்தரரைப்பற்றிக் கூறும் 8 ஆம் செய்யுளில் சொல்லப்பெற்றது. அப் பாடல் வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/17&oldid=676712" இலிருந்து மீள்விக்கப்பட்டது