பக்கம்:இலக்கியக் கேணி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டத் தொகை 25

கோயிலும், ஊரும் பண்டை நாட்களில் தமிழகத் திருந்தன. அவற்றைக் குறித்துச் சிறிது காண்போம்.

திருத்தொண்டத் தொகையான் குகை

மூன்ரும் இராசேந்திர சோழனுடைய 4 ஆவது ஆட்சி ஆண்டு (கி. பி. 1250) க்குரிய திருவிடைவாயில் கல்லெழுத்தினின்று திருத்தொண்டத் தொகையான் குகை ' என்று ஒரு குகை இருந்ததாக அறிகிருேம். திருப்பள்ளியறையைப் பார்வையிடுவாருக்கு மாகவும், திருப்பதியம் விண்ணப்பம் செய்வாருக்குமாகவும் நிலம் விடப்பெற்றதாக இக்கல்லெழுத்துக் கூறுகின்றது. இப்பள்ளியறையில் திருத்தொண்டத் தொகையான் குகை இருந்தது. இக்குகையுள் திருமுறைகள் வைக்கப் பட்டிருந்தன. தி ரு க் க ழு ம ல த் தி ல் திருத்தோணி புரமுடைய நாயனர் கோயிலில் திருமுறைத் தேவாரச் செல்வன் குகை என்ற ஒரு குகை இருந்தது. அதில் முதலியார் திருவையாறுடையார் என்பவர் இருந்தார். அவர் வழியில் வந்தவரே இக்கல்லெழுத்தில் கண்ட தருமத்தைச் செய்தவர் ஆவர் என்றும், ஆனமங்கல முடையான் அரையன் வடுகநாதனை சென்ன வரையர் என்பவர் வாணுதரயர் பொருட்டு இத்திருத்தொண்டத் தொகையான் குகையை ஏற்படுத்தினர் எனவும் இக்

கல்லெழுத்துக் கூறுகிறது.

திருத்தொண்டத் தொகையான் திருமடம்

திருச்சி ஜில்லா கோவங்தபுத்துாரில் மூன்ரும் இரா சேந்திர சோழனது 2 ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1248)க் குரிய கல்லெழுத்து, திருத்தொண்டத் தொகையான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/26&oldid=676721" இலிருந்து மீள்விக்கப்பட்டது