பக்கம்:இலக்கியக் கேணி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T있8 இலக்கியக்கேணி

அதுவுமில்லையானல் பீடங்கள் அமைத்தும் வழிபடலாம் என்று ஆகமம் கூறுகிறது. ஆதலால் உருவம் அமைக்க முடியாத தொகையடியார்களைச் சிவலிங்கத் திருமேனி வாயிலாக வழிபட வேண்டித் திருத்தொண்டத்தொகை பீச்சரம் என்ற இக்கோயிலை அமைத்துள்ளார்கள். அன்றியும் திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரர் வடக்கு வாயில் வழியாக வந்தார் என்பதும் ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இவ்வாலயம் நவலிங்கம் கோயில்’ என்று இப்பொழுது வழங்கப்படுகிறது." இக் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவுருவம் அமைக்கப் பெற்றதாகக் கல்வெட்டுக்கள் அறிவிக்

    • +

'கின்றன.';

முன்ரும் குலோத்துங்க சோழன் தனது 2 ஆவது ஆட்சியாண்டில் (கி பி. 1180ல்) நில அளவு செய்தான் ; அப்போது அருமொழியிச்சரத்துச் சுப்பிரமணியப் பிள்ளை யாருடைய நிலங்களை எட்டாந்தரமாக்கி இறையிலி யாகச் செய்திருப்பதோடு, திருத்தொண்டத்தொகை யிச்சரமுடையார் திருக்கோயிலுள்ள இடமும் அதில் உள்ள குளம் முதலியனவும் இறையிலியாக்குமாறு உத்தரவு அளிக்கப்பெற்றன ; பெரும்பற்றப் புலியூர்ச் சபையிலிருந்த நிலம் அளவுடைப் பெருமக்களால் இவ் வத்தரவுகள் நிறைவேற்றப் பெற்றன. (இங்ங்னம் மூன்ரும் குலோத்துங்க சோழனது சிதம்பரக் கல் லெழுத்தினின்று அறிகிருேம்.)

  • தருமபுர ஆதீனத்து வெளியீடாகிய சிதம்பரம் என்னும்

நூல்; பக்கம் 136. ஷை பக்கம் 44.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/29&oldid=676724" இலிருந்து மீள்விக்கப்பட்டது