பக்கம்:இலக்கியக் கேணி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 . இலக்கியக்கேணி

தண்ணிர்ப் பந்தல்.

தண்ணிர் என்ருல் வேண்டாம் என்பாரும் என் போல் எவரும் இரார். சூரியனது வெய்ய கிரணங்கள் வானுலகும் மண்ணுலகும் பற்றிப் போகுமாறு செய்யும் காலத்தில் தண்ணீரை விரும்பாத பிராணியும் இருக்குமா! நண்பகலில் தெருவின் வழியே செல்லின், சிறிதும் இரக்கமில்லாத செல்வரிடம் சென்று இரப்பவரைப் போல, அத்தெருப்புழுதி வெப்பத்தைத்தானே அள்ளி விசும் ரியவரோடு சேர்ந்த நல்லவரும் தீயவர் ஆவது போல, வெப்பு நிலத்தில் படிந்து வரும் காற்றும் சுடத் தானே செய்யும் வறுமை அடைந்தோர் தம்மிலும் வறுமையுடையாரிடம் சென்று இரத்தல் போல இலைகள் கருகி உதிர்ந்த மரத்தின் நிழலும், வீட்டு ஓரங்களும், கருகியுள்ள புல்தரையும் அன்னேர்க்கு ஒதுக்கிடமாம். இங்ங்ணம் வெப்பத்தால் வருந்தும் சமயத்துத் தண்ணிர்ப் பந்தர் ஒன்று தெருக் கோடியில் இருந்தால் அவ்வழிப் போக்கன் என்ன கேட்பான் ? . அப்பா ! சில்லென்று ஒரு குவளை தண்ணீர் கொடு” என்றுதானே கேட் பான் இங்கிலேயறிந்தே அன்றும் இன்றும் வேனிற் கால்ங்களில் தண்ணிர்ப் பந்தர் வைத்து நடத்துதலைத் தமிழ் நாட்டு மக்கள் பல அறங்களில் ஒன்ருகக் கருதி மேற் கொண்டனர். இறைவனே ஒரோவழி தண்ணிர்ப் பந்தல் வைத்திருப்பதாக நூல்கள் கூறும்.

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

திருவிளையாடற் புராணம் ஆலவாய்ப் பெருமான் மன்பதைகள் பொருட்டு நிகழ்த்திய 64 திருவிளையாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/3&oldid=676698" இலிருந்து மீள்விக்கப்பட்டது